விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜியின் அப்பா, சித்தப்பா வெளியில் இருந்த தங்கமயிலின் அப்பாவை பார்த்து மிரட்டி கட்டி போட்டார்கள். அவர், நான் வழி தவறி வந்தேன். மன்னித்து விடுங்கள் என்று அழுது புலம்பியும் கேட்கவில்லை. தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது? என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் அம்மா, தன்னுடைய கணவரை தேடி அலைந்தார். பின் வீட்டிற்கு வந்த கதிர், ராஜியின் அப்பா வீட்டில் தங்கமயில் அப்பாவை கட்டி போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனார்.

உடனே அவர் கயிற்றை கழட்டும் போது சக்தி ப்ரச்சனை செய்தார். இந்த விஷயம் அறிந்த பாண்டியன் குடும்பமே வெளியே வந்து சண்டை போட்டார்கள். அதற்கு ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே, அவர் எதற்கு இங்கு வந்தார்? என்ற உண்மை தெரியும் வரை விடமாட்டோம் என்றார்கள். உடனே அங்கு வந்த தங்கமயில் அம்மா, தங்கமயில் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக வாழ்த்து சொல்லத்தான் வந்தார் என்றார். ஆனால், ராஜியின் அப்பா- சித்தப்பா இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் அந்த இடத்திற்கு போலீஸ் வந்து விசாரக்க, நடந்ததை சொன்னார்கள். அதற்கு போலீஸ், இது உங்கள் குடும்ப பிரச்சனை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதன் பின் பாண்டியன், பிறந்தநாளுக்கு நேரடியாக வந்து வாழ்த்து சொல்லி இருக்கலாம். எதற்கு தேவையில்லாத இந்த வேலை என்று சொல்ல, தங்கமயில் அப்பா- அம்மா எதுவும் பேசாமல் முடியாமல் அமைதியாக இருந்தார்கள். பின் எல்லோரும் தங்கமயிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பரிசு தந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், வேலைக்கு வர சொல்லிவிட்டார்கள். சர்டிபிகேட் எங்கே? என்று கேட்க, தங்க மயிலால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவருடைய அம்மா, சர்டிபிகேட் தொலைந்து விட்டது என்று புது கதை ஒன்று சொன்னார். இருந்தும் விடாமல் பாண்டியன், தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மீனா, அத்தை இடம் என்ன சொன்னீர்கள்? எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு செந்தில், எனக்கு கஷ்டமாக இருக்கிறது. கதிர் அந்த மாதிரி வேணாம் என்று தான் சொன்னேன். நானும் எனக்கான ஒரு வேலையை தேடுவேன் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து போனார். அங்கு சர்டிபிகேட் இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
அப்போது பழனிக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று புலம்ப, கோமதியும் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்றார். உடனே பாண்டியன் வாக்குறுதி கொடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, நீங்கள் செலவிற்கு பழனிக்கும், செந்திலுக்கு பணம் கொடுங்கள் என்று சொல்ல, பாண்டியனும் சரி என்கிறார். பின் கடையில் பாண்டியன், இருவரும் தினமும் 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செலவுக்கு வேண்டுமென்றாலும் சொல்லிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்றவுடன் செந்திலுக்கு இன்னும் கோபம் அதிகமானது.

சீரியல் ட்ராக்:
இதனால் செந்தில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லாமல் கல்லாவிலிருந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பொய் கணக்கு எழுதி வைக்கிறார். இதை பார்த்த பழனி ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும், ஆக்கிரமிப்பு இடம் சம்பந்தமாக தகராறு செய்கிறார்கள். அதற்கு மீனா, நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு சத்தம் போட வேண்டாம் என்று சொல்கிறாள். கோபத்தில் அவர்கள் மீனாவிடம் சண்டை போட்டு மிரட்டி விட்டு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் பள்ளியில், என்ன செய்வது என்று புரியாமல் தனக்கு தெரிந்த ரைம்ஸ் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






