விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியனின் மகன்கள், மருமகள்கள் எல்லோருமே அரசியின் படிப்பை பற்றியும் வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மருமகள்கள் மூவருமே அரசிக்கு சப்போர்ட் செய்து கல்லூரிக்கு போவது பற்றி பேசி இருந்தார்கள். பின் பாண்டியன் வந்தவுடனே அவருடைய மூன்று மகன்களுமே அரசி கல்லூரிக்கு போவதற்கு அனுமதி வாங்கி இருந்தார்கள்.

இன்னொரு பக்கம் சுகன்யாவிடம் குமார், எப்படியாவது அரசியை கல்லூரிக்கு அழைத்து வாருங்கள். நான் அவரிடம் பேச வேண்டும். வேறு எங்கும் பேசுவதற்கு முடியாது என்று கேட்டார். அதற்கு சுகன்யா, சரி நாம் முயற்சி செய்கிறேன். அரசி மனம் மாறுவாரா என்று தெரியாது என்றார். அதற்கு பின் கல்லூரிக்கு அரசி தயாராக இருந்தார். கோமதி, செந்திலை கொண்டு போய் விட சொன்னார். உடனே சுகன்யா, நான் அரசியை கல்லூரிக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னவுடன் மீனாவிற்கு சந்தேகம் வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் கோமதி, அரிசியை கல்லூரிக்கு சுகன்யா அழைத்து செல்ல சம்மதம் கொடுத்தார். ஆனால், மீனாவிற்கு சந்தேகமாக வந்தது. பின் கல்லூரியில் குமார் அரசிக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது குமார், அரசி இடம் பேச வந்தார். ஆனால், அரசி எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். சுகன்யாவும் அரசியை குமாரிடம் பேச சொன்னார். அப்போது செந்தில்- மீனா கல்லூரிக்கு வந்ததை பார்த்து சுகன்யா சந்தேகப்பட்டார். பின் கல்லூரியில் குமார் அரசிடம் பேசுவதை பார்த்த செந்தில் பயங்கரமாக கோவப்பட்டு குமாரிடம் சண்டைக்கு போனார்.

நேற்று எபிசோட்:
சுகன்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குப்பின் அரசியை கல்லூரிக்கு போக சொல்லிவிட்டு குமாருக்கு செந்தில் எச்சரிக்கை எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார். அதற்குப்பின் மீனா, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. வீடே பத்திக் கொண்டிருக்கிறது. இதில் உங்களுக்கு குளிர் காயணுமா? என்றெல்லாம் கோபமாக பேசி இருந்தார். சுகன்யாவும் என்னென்னவோ சொல்லி சமாளிக்க பார்த்தார். மீனா பேசியதில் சுகன்யா அழுது கொண்டே வீட்டிற்கே வந்தார். பின் சுகன்யா, மீனா-செந்திலை பற்றி தவறாக சொல்லி இருந்தார்கள். குமார் வந்த விஷயத்தை தெரிந்த பாண்டியன் கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுகன்யா ரூமில் அழுது கொண்டிருப்பது போல் டிராமா செய்து கொண்டிருக்கிறார். அப்போது பழனி, நீ மீனாவை தப்பாக புரிந்து இருக்கிறார். அவர் அப்படி பேச மாட்டார்
என்று சொன்னவுடன் சுகன்யாவுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் அவர், மீனா மேல பாசம் ஓவராக இருக்கிறது. உனக்கும் அவளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் பழனி கோபப்பட்டு சுகன்யாவை திட்டி விட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், முத்து வேலை சந்தித்து குமாரை அடக்கி வையுங்கள், இல்லை என்றால் நான் அடக்குவேன் என்று மிரட்டி விட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்த முத்துவேல், குமாரை அடித்து எதற்காக அரசியை பார்க்க போனாய்? என்று கேட்க, அவர் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலுமே, முத்துவேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் போய் அரசியை பார்த்தால் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று சொல்கிறார். ஆனால், சக்திவேல் அதை கண்டுகொள்ளாமல் தன் மகனுக்கு கொம்பு சீவி விடுகிறார். நீ எப்படியாவது அந்த அரசியை கல்யாணம் செய்து இந்த வீட்டுக்கு கொண்டு கூட்டிட்டு வா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியனிடம் சுகன்யா அழுது கொண்டே மீனா பேசியதை சொல்கிறார். பின் மீனாவிடம் பாண்டியன் கோபமாக விசாரித்தார். சுகன்யா முறைத்துக் கொண்டே மீனாவை பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






