-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

பாண்டியன் வீட்டுக்குள் வந்தவுடன் பழனியிடம் சுகன்யா போட்ட கண்டிஷன், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
154

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே பழனியின் திருமணத்தில் நடந்ததை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பழனி, பாண்டியன் குடும்பத்தை நினைத்து கவலையில் இருந்தார். உடனே அவருடைய அண்ணன்கள், இனி நீ எங்கும் போகக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், பழனி அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். அதற்குப்பின் மாரி, சுகன்யாவை பற்றி தன் மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவள் ரொம்ப வாயாடி. அவருடைய வாய்க்கு யாருமே நிக்க முடியாது.

-விளம்பரம்-

அதனால் தான் நானே அவளிடம் சில வருஷமாக பேசுவதே இல்லை என்று சொன்னதை கேட்டு அப்பத்தா ரொம்பவே கவலைப்பட்டார். இன்னொரு பக்கம் கதிர்- செந்தில் இருவருமே பெண் வீட்டிற்கு சென்று நடந்ததை விசாரித்தார்கள். பழனி அண்ணன்கள் சொன்ன விஷயத்தை கேட்டு செந்தில்-கதிர் பயங்கரமாக கோபப்பட்டார்கள். பின் செந்தில், இதைப் பற்றி வீட்டில் சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. கோபத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்களிடம் சண்டை போட போனார். உடனே பாண்டியன், தடுத்து நிறுத்தி விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப்பின் பழனி போன் செய்து தன்னுடைய மச்சான்களிடம் பேசி இருந்தார். அவர்களுமே உண்மையை சொல்லாமல் நார்மலாக பேசி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் தங்களுடைய வேலை செய்யும் இடத்திற்கு பழனியை அவருடைய அண்ணன்கள் அழைத்து வந்தார்கள். அப்போது வந்த பாண்டியன், பழனியின் அண்ணன்களிடம் பெண் வீட்டில் சொன்ன விஷயத்தை கேட்டு சண்டை வாங்கி இருந்தார். ஆரம்பத்தில் அவர்களுமே ஏதேதோ சமாளித்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். இதனால் பழனியின் அண்ணன்களுக்கும் பாண்டியனுக்கும் இடையே சண்டை நடந்தது.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

அப்போது பாண்டியனின் மகன்களும் அங்கு வந்து சண்டை போட்டார்கள். இருவருக்கும் இடையே அடிதடி அளவிற்கு சண்டை நடந்தது. இதையெல்லாம் உள்ளே நின்று கேட்ட பழனி கோபத்தில் தன் அண்ணன்களை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். பழனி பின்னாடியே கதிர்- செந்தில் இருவருமே சென்று அவரை சமாதானம் செய்ய பார்த்தார்கள். நேற்று எபிசோட்டில் கோபத்தில் வீட்டிற்கு வந்த பழனி, துணிகளை எல்லாம் பேக் செய்து சுகன்யாவுடன் வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். அப்பத்தா, என்ன பிரச்சனை? என்று கேட்டதற்கு, பழனி நடந்ததை சொன்னார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் பார்த்து அவருடைய அண்ணன்களும் வந்து விட்டார்கள். அவர்களுமே தாங்கள் செய்த தவறை ஒத்து கொண்டார்கள். இதனால் அப்பத்தா ரொம்பவே கோபப்பட்டு தன்னுடைய மகன்களை திட்டி இருந்தார். பின் பழனி, பாண்டியன் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, நானும் சுகன்யாவும் இந்த வீட்டில் தான் இருக்க போகிறோம். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், இது உன் வீடு. நீங்கள் தாராளமாக இருக்கலாம் என்று சொல்லி அழைத்து செல்கிறார். இது எல்லாம் பார்த்து பழனியின் அண்ணன்கள் கோபப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பழனி, சுகன்யா வந்தது நினைத்து கோமதி ரொம்ப சந்தோஷப்படுகிறார் அவர்களுக்காக தடபுடலாக சமையலும் செய்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த சுகன்யா, நான் உதவி செய்யட்டுமா என்று கேட்க, கோமதி வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதற்குப் பின் வேலையில் இருந்து எல்லோரும் வருகிறார்கள். பழனிக்காக சுகன்யா வெளியில் காத்திருக்கிறார். அப்போது வந்த பழனி இடம் சுகன்யா, நமக்கு ஒரு ரூம் கூட இல்லை. இந்த வீடு ரொம்ப சின்னதாக இருக்கிறது. நாம் அங்கேயே சென்று விடலாம் என்று சொல்ல, பழனி, வேணாம் இங்கே இருக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு பின் பாண்டியன், தங்களின் ரூமை பழனிக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news