-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

விறுவிறுப்பாக நடக்கும் பழனியின் திருமணம், சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம் -பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
204

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், வீட்டிலேயே சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. ஆனால், நான் வேறு வேலைக்கு போகிறேன். டீச்சர் வேலை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பொய் சொன்னார். உடனே கோமதி, டீச்சர் வேலைக்கு போ, வேறெங்கும் வேண்டாம் என்றார். ஆனால், பாண்டியன் உனக்கு பிடித்ததை செய் என்றார். தங்கமயில், வேலைக்கு போகாமல் எப்படி தடுப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். பின் சரவணன் இடம் தங்கமயில், இதை பற்றி பேசி இருந்தார். ஆனால், சரவணன் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே சென்னையில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து விட்டார்கள். பாண்டியன், பழனியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுத்தார். அப்போது சரவணன், தன்னுடைய தந்தை சொன்ன எல்லா வேலையும் செய்து முடித்தார். இதனால் பாண்டியன், அவரை பெருமையாக பேசி மற்ற இரண்டு மகன்களையும் மட்டம் தட்டி இருந்தார். அதற்குப்பின் ராஜி, சென்னைக்கு தேர்வு எழுத சென்ற விஷயத்தை பற்றி மீனாவிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆகி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதை அடுத்து வீட்டில் பழனியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் அப்பத்தாவும் அவருடைய மருமகள்களும் வெளியே நின்று பார்த்து சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து பழனியின் அண்ணன்கள் வந்தார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் பழனி தடுமாறி கொண்டு இருந்தார். அவர்களுமே இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசித்தார்கள். உடனே அப்பத்தா, தயவுசெய்து இந்த கல்யாணத்தில் பிரச்சினையும் செய்ய வேண்டாம். என் மகன் ஏதாவது செய்து கொள்வான்.

கடந்த வாரம் எபிசோட்:

-விளம்பரம்-

அவனை வாழ விடுங்கள் என்றெல்லாம் சொன்னார். நேற்று எபிசோட்டில் பழனி தன்னுடைய கல்யாண வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவருடைய அண்ணன்கள் கோபப்பட்டார்கள். பின் பழனியை அழைத்து அவர்கள் இருவருமே பேசினார்கள். ஆனால், பழனி எதுவும் சரியாக பதில் சொல்லாமல் இருந்தார். உடனே அவருடைய அண்ணன்கள், இந்த முறை நாங்கள் கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம். நீ தைரியமாக இரு. நாங்களும் கல்யாணத்துக்கு வருகிறோம் என்று சொன்னவுடன் பழனி- அப்பத்தா இருவருமே ஷாக் ஆனார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

சந்தோஷத்தில் பழனி தன்னுடைய அண்ணன்களை கட்டிபிடித்து நன்றி சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் தடைபடலாக எல்லோருமே பழனியின் கல்யாணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். பழனிக்குமே மேக்கப் போட்டுவிட்டு ரெடி பண்ணி இருந்தார்கள். அப்போது அரசி, தங்கமயில் நகையை கேட்டவுடன் அவர் பயத்தில் என்னென்னவோ சொல்லி சமாளித்தார். பின் அரசி தன்னுடைய தோழிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது வந்த சக்தி, அரசி இடம் பேச, அவரும் பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் சக்தி ஒளிந்து கொண்டார்.

சீரியல் ட்ராக்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனியில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோயிலில் மும்முரமாக நடக்கிறது. பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு வேலையாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். பழனி அழகாக மணமகன் போல் ரெடி ஆகி மண்டபத்திற்கு வருகிறார். அவரை பார்த்தவுடன் பாண்டியன் மகன்கள் எல்லோருமே வம்பு இழுத்து சண்டை வாங்குகிறார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பழனியின் திருமணத்தை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news