விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், பணம் கொடுக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்ல, பணம் ரெடி பண்ண முடியவில்லை என்று கதிர் அமைதியாக இருந்தார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், கதிரின் கையை பிடித்து வெளியே தள்ள பார்த்தார். அப்போது சரவணன் தடுத்து நிறுத்தி நடந்த உண்மையை சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். பின் தங்கமயிலை திட்டி அறிவுரை சொல்லி சென்று விட்டார். கோபத்தில் கோமதி பயங்கரமாக திட்டி இருந்தார். அவமானத்தில் அழுது கொண்டே தங்கமயில் உள்ளே சென்று விட்டார்.
இந்த வாரம் தங்கமயில் செய்த வேலையை நினைத்து கோமதி புலம்பிக்கொண்டே இருந்தார். ராஜி-மீனா எவ்வளோ சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் தங்கமயில் செய்த செலவு பற்றி தான் புலம்பி கொண்டிருந்தார். அப்போது மீனா, எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று சொல்ல, ராஜி கோபப்பட்டார். உடனே வேலை டென்ஷனில் மறந்து விட்டேன் என்று மீனா சொல்லி சமாளித்தார். இவர்கள் பேசுவதை எல்லாம் தங்கமயில் கேட்டு அழுது கொண்டே சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் கதிர், பணத்தை எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, எனக்கு பணம் முக்கியமில்லை. தெரியாமல் செய்தது தான் தவறு. யாரும் எந்த பணத்தையும் தர தேவை இல்லை என்று பாண்டியன் சொன்னார். பின் தங்கம்யில் சாப்பிடவில்லை என்று மீனா சொல்ல, அவளுக்கு சாப்பிட தெரியாதா? என்று கோமதி கோவமாக சொன்னார். பின் ராஜி – மீனா இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவில்லை. நேற்று எபிசோட்டில், தங்கமயில் இடம் என்னென்னவோ பேசி ராஜு- மீனா சமாதானம் செய்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது தங்கமயில், சண்டையில் நீங்களும் இதுதான் சந்தர்ப்பம் என்று வன்மத்தை கக்கி விட்டீர்கள் என்று சொல்ல, மீனா ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு வழியாக தங்கமயிலை சமாதானம் செய்து சாப்பிட அழைத்து வந்தார்கள். ஆனால், கோபத்தில் இருந்த கோமதி நக்கல் ஆகவே தங்கமயிலை வம்பு இழுத்து பேசி இருந்தார். அதற்கு பின் மீனா, தங்கமயில் விஷயத்திற்கே இப்படி என்றால், நீங்கள் ராஜீ -கதிருக்கு செய்து வைத்த கல்யாணம் தெரிந்தால் என்ன ஆகும்? என்று சொன்னவுடன் கோமதிக்கு நெஞ்சு வலியே வந்தது. உடனே ராஜி-மீனா தைரியம் சொன்னார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில், வீட்டில் பாண்டியன், எல்லோரையும் வரவைத்து குடும்ப சூழ்நிலையை எடுத்து சொல்கிறார். அது எல்லோருக்குமே போர் அடிக்கிறது. ஆனால், இவர்கள் எல்லோருமே சேர்ந்து பேசும்போது தங்கமயிலை யாரும் கூப்பிடவே இல்லை. தங்கமயில் ரூமில் இருந்து பார்த்து ரொம்ப வருத்தப்படுகிறார். அதற்குப்பின் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். தங்க மயிலை யாருமே கூப்பிடவில்லை. யாராவது கூப்பிடுவார்கள் என்று அவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா, தங்க மயிலை கூப்பிடும் போது வேண்டாம் என்று பாண்டியன் தடுத்து விட்டார்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கேட்டு தங்கமயில் வருத்தப்பட்டு அழுகிறார். அதற்குப் பின் மீனா- ராஜி இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவே இல்லை. எனக்கு சாப்பிட விருப்பமில்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். பின் தங்கமயில் அம்மா போன் செய்கிறார். உடனே தங்கமயில் நடந்ததை சொல்ல அவர் மீண்டும் அறிவுரை சொல்ல பார்த்தார். உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று திட்டி போனை வைத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.