விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மாரி, இனிமேல் நீ அரசி பக்கம் போகவே கூடாது. உன் அப்பா தலையில் அடித்து சத்தியம் செய் என்றார். குமாரால் எதுவுமே சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல் சத்தியம் செய்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பமே வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டு இருந்தது. பாண்டியனால் அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போனார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்தும் பாண்டியன் கேட்கவே இல்லை.

பின் அவர், என் மீது மரியாதை இருந்தால் என்னை தொடர்ந்து யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றார். எல்லோருமே பாண்டியன், எங்க போவார்? என்ன செய்வார்? என்ற குழப்பத்திலேயே இருந்தார்கள். பாண்டியன் மழையிலேயே நனைந்து கொண்டு தன் மகளை நினைத்து வருத்தத்துடன் அழுது கொண்டே போனார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியை நினைத்து வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். இதையெல்லாம் பார்த்து குமாரின் அப்பாவிற்கு சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், செந்தில்- கதிர் இருவரும் அப்பாவை தேடி போகலாம் என்று கிளம்பி இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன், எங்கு செல்வது என்று புரியாமல் வேதனையில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பாண்டியன் மீது மோத வர, பாண்டியன் நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார். அதற்குப்பின் பிச்சை எடுப்பவர்கள் அருகில் அமர்ந்து அரசியை நினைத்து பாண்டியன் வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். கதிர்-செந்தில்-பழனி மூவருமே பாண்டியனை தேடி எல்லா இடத்திலுமே அலைந்தார்கள். பின் பிச்சைக்காரர் உடன் பாண்டியன் படுத்திருப்பதை பார்த்து கதிர் ரொம்பவே மனமுடைந்து விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:
பின் அவர் தன்னுடைய தந்தையை எழுப்பி தண்ணீர் கொடுத்து ஆறுதல் சொன்னார். பாண்டியன் ரொம்ப எமோஷனலாக கதிரை கட்டிப்பிடித்து அழுதார். அதற்குப்பின் கதிர், பாண்டியன் இருக்கும் இடத்தை எல்லோருக்கும் சொல்லி வரவைத்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு பாண்டியன் இருக்கும் இடத்தை சொன்னார்கள். சரவணன், பாண்டியனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார். செந்தில்- கதிர் இருவரும் பாண்டியனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அவரின் நிலையை பார்த்தவுடன் மொத்த குடும்பமும் கதறி அழுகிறது. கோமதி, நான் தான் ஒழுங்காக அரசியை பார்த்துக் கொள்ளவில்லை. என் மீது தான் தவறு. என்னை மன்னித்து விடுங்கள் என்று தன் கணவரிடம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே தங்களுடைய வேலைகளை செய்கிறார்கள். பாண்டியனின் மகன்கள, தன்னுடைய அப்பாவின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ராஜியின் அப்பா வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அரசி-குமார் காதலை பற்றி பேசும்போது அப்பத்தா, கோமதி நிலைமை நினைக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்று புலம்புகிறார். உடனே முத்துவேல், அரசி பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் பேசாதே. நம் மகனின் நிலைமையும் யோசித்துப் பார். குமார் மீது எந்த தவறும் இல்லை என்று சப்போர்ட்டாக பேசுகிறார். அதற்குப்பின் தங்கமயில் பாண்டியனுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அரசி அப்பா என்று கூப்பிடும் போது பயங்கரமாக கோமதி கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






