விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில்- கதிர் இருவருமே குமாரை பார்த்து அடி வெளுத்து வாங்கி இருந்தார்கள். குமாரும் தன்னால் முடிந்தவரை தடுத்தார். இருந்தாலும் விடாமல் அடித்தார்கள். பின் அங்கு உள்ளவர்கள் இருவரையும் தடுத்து விலக்கி விட்டார்கள். இன்னொரு பக்கம் டிவியில் மீனாவின் மீது எந்த தவறும் இல்லை என்று சொன்னதைக் கேட்டு பாண்டியன் குடும்பம் ரொம்ப சந்தோஷப்பட்டது. அதற்குப்பின் பாண்டியன், சக்திவேல்- முத்துவேலிடம் சண்டைக்கு போனார். அப்போது பாண்டியன், இது இவ்வளவு கேவலமான வேலை செய்விர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு நன்றாக தானே பார்த்துக் கொள்கிறோம் என்று ஆக்ரோஷமாக பேசி இருந்தார்.

இதனால் கோபப்பட்ட முத்துவேல், குமாரை வீட்டிற்கு வர வைத்தார். அப்போது முத்துவேல், குமாரை அடித்து எதற்காக இந்த வேலையெல்லாம் செய்தாய்? என்று கேட்டார். அதற்கு சக்திவேல், நீங்கள் தானே மீனாவை வேலை விட்டு அனுப்பனும் என்று சொன்னீர்கள். அதனால் தான் இப்படி செய்தோம் என்றார். அதற்கு முத்துவேல், இப்படி எல்லாம் செய்து கேவலமாக மாற்றிக்கொள்ள சொன்னேனா, எனக்கு எப்படி செய்யணும் என்று தெரியும் உங்கள் வேலையை பாருங்கள் என்று திட்டி அனுப்பி விட்டார். பின் சத்திவேல், தன் மகனை திட்டி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீனா செய்த வேலைக்காக பாண்டியன் கேக் வாங்கிட்டு வந்து இருந்தார் . அப்போது வீட்டில் உள்ளவர்கள் ராஜியும் நடன போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னார்கள். உடனே பாண்டியன் இரண்டு கேக் வாங்க சென்றார். ஆனால், மீனா- ராஜி இருவருமே வேண்டாம் என்று சொல்லி அந்த கேக்கை வெட்டி வீட்டில் உள்ள எல்லோருக்குமே கொடுத்து சந்தோஷப்பட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சரவணன் வருத்தப்பட்டார். பின் சரவணன் சர்டிபிகேட் எங்கே என்று கேட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:
தங்கமயில், என் அப்பா தொலைத்துவிட்டார் என்று சொன்னவுடன் இன்னும் பயங்கரமாக கோபப்பட்டு சரவணன் திட்டி இருந்தார். உன்னுடைய கல்லூரியின் பெயரை சொல்லு, நானே சர்டிபிகேட் ரெடி பண்ணுகிறேன். என்னுடைய அப்பா, மீனா -ராஜியை பெருமையாக பேசும்போது உன்னை பெருமையாக பேசணும் என்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பை நீ தர மாட்டுகிறாய் என்று கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் காலையில் ராஜி- கதிர் இருவருமே ப்ராக்டிஸ்காக கிரவுண்டுக்கு சென்று இருந்தார்கள். அங்கு அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து குமார் கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, பரிசு வாங்கிய பைக் வீட்டிற்கு வருவதால் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ராஜியின் பைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பைக் கொண்டு வந்து வீட்டில் விடுகிறார்கள். கதிர் பைக்கை பார்த்து எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள். பின் கதிர், பைக்கை எடுத்து எல்லோரையும் ரவுண்ட் கூட்டிட்டு போகிறார். ஆனால், ராஜியை மட்டும் ஏற்றவில்லை. இதனால் ராஜி ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் செந்தில் இடம் பைக்கை பற்றி பெருமையாக கதிர் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் அரசி கல்யாண பத்திரிகையை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டுக்கு வந்த சரவணன், நான் வேலை செய்யும் இடத்தில் பத்திரிக்கை வைக்க வேண்டும். தங்கமயில் கிளம்பு என்கிறார். தங்க மயிலும் ரொம்ப சந்தோசமாக தயாராகி வருகிறார். அப்போது சரவணன், நான் பத்திரிக்கை வைக்க போகவில்லை. உன்னுடைய கல்லூரிக்கு போகிறோம் என்று சொன்னவுடன் தங்கமயில் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






