விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அரசியை பார்ப்பதற்காக குமார் கல்லூரிக்கு சென்று இருந்தார். குமாரை பார்த்து கோபத்தில் அரசி திட்டினார். அப்போது குமார், எங்கு பார்த்தாலும் உன் ஞாபகமாகத்தான் இருக்கிறது. உனக்கு செய்த துரோகம் தான் என் கண்முன் வருகிறது. அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவர நினைக்கிறேன் என்றெல்லாம் பேசினார். அதற்கு அரசி, நீ என்னை விட்டாலே அதுவே போதும். தயவு செய்து இங்கிருந்து போ என்று எல்லாம் திட்டி விட்டு சென்றார். குமார் வேதனையில் அழுதார்.

நேற்று எபிசோட்டில் கதிர், தன்னுடைய டிராவல்ஸ் தொடங்கும் இடத்தை அழகாக ரெடி பண்ணிக் கொண்டிருந்தார். அதற்காக ராஜி, கதிர், நண்பர்கள் எல்லோருமே உதவி செய்தார்கள். மொத்த வீடுமே கதிர் டிராவல்ஸ் தொடங்குவதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். கதிர், கடைக்கு வைத்திருக்கும் பெயரை பற்றி எல்லோரும் கேட்டார்கள். ஆனால், கதிர் சர்ப்ரைஸ் என்று சொன்னார். மறுநாள் காலையில் மொத்த குடும்பமும் கதிர் டிராவல்ஸ் தொடங்கும் இடத்திற்கு கிளம்பினார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன், எனக்கு வேலை இருக்கிறது வர முடியாது என்று சென்று விட்டார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டார்கள். பின் ட்ராவல்ஸ் திறப்பு விழாவிற்கு எல்லாரும் வந்து விட்டார்கள். பாண்டியன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் மொத்த குடும்பமும் டிராவல்ஸ் திறப்பு விழாவில் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோருமே பாண்டியனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வருகிறார். பின் எல்லோருமே கதிர், டிராவல்ஸுக்கு யாருடைய பெயர் வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். ஒவ்வொருவருமே ஒவ்வொரு பேரை சொல்கிறார்கள். பின் கதிர் டிராவல்ஸ் பெயர் போர்டை திறக்கிறார். அதில் பாண்டியன் டிராவல்ஸ் என்று பெயர் இருக்கிறது. அதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது. சந்தோஷத்தில் பாண்டியன் உரைந்து போய்விடுகிறார். என்ன சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் பாண்டியனிடம் கதிர்-ராஜி இருவருமே ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். நெகிழ்ச்சியில் பாண்டியன் அங்கிருந்து செல்கிறார். கதிருமே தன் அப்பாவின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை கண்டு ரசிக்கிறார். பின் எல்லோருமே பாண்டியன் பெயரை வைத்தது நினைத்து பெருமையாக கதிரை பேசுகிறார்கள்.
பின் பாண்டியன், கடையில் தன் மகன் தன்னுடைய பெயரை வைத்தது நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். வியாபாரத்தை கூட பார்க்காமல் தனக்குத்தானே பேசி சிரித்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






