விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் மட்டும் பயத்தில் சாப்பிடவே இல்லை. அதற்குப்பின் கோமதி, தங்கமயிலை அழைத்து வந்து சரவணனிடம் பிரச்சனையை பற்றி விசாரித்தார். சரவணன் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டிக் கொண்டிருந்தார். பின் சரவணன், உண்மையை சொல்ல வந்து விடுவாரோ? என்ற பயத்தில் தங்கமயில் ஏதேதோ கதைகளை சொல்லி எல்லோரையும் நம்ப வைக்க பார்த்தார்.

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைத்தார். பின் எல்லோரும் சரவணனை சமாதானம் செய்தார். பின் சரவணன், அவளை பற்றி உண்மையை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கொந்தளித்தார். சரவணன், தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து ரொம்ப எமோஷனலாக அழுதார். இது எல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே தவித்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன், இவள் டிகிரி எல்லாம் படிக்கவில்லை. வெறும் 12வது தான் படித்திருந்தார். இவள் மட்டுமில்லை இவருடைய மொத்த குடும்பமே நம்மை பொய் சொல்லி ஏமாற்றி இருந்தார்கள். இவர் படிக்காததனால் தான் டீச்சர் வேலை வேண்டாம் என்று சொல்லி பொய் சொல்லி ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்யப் போனார். இப்படி இவள் வாயை திறந்து சொன்னது எல்லாமே பொய் தான் என்றார். இதை எல்லாம் கேட்டு கோமதிக்கு தலைமேல் இடி விழுந்தது போல இருக்கிறது. கோமதி அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார்.

சீரியல் ட்ராக்:
உடனே சரவணன், இதற்கே விழுந்துட்டால் என்னம்மா, இவளைப் பற்றி இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கிறது. இவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. பாண்டியனுக்கு கோபமும் அதிகமானது. தங்க மயிலால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டே இருந்தார். சரவணன் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார்.
https://www.youtube.com/watch?v=xgLxHAUCRfw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தங்கமயில் இடம் பாண்டியன், உன்னுடைய அப்பா அம்மாவை வீட்டிற்கு வர வை என்று சொல்கிறார். பின் தங்கமயிலின் அப்பா அம்மா வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது கோமதி, இவ்வளவு பெரிய பித்தலாட்ட ஏமாற்றுக்காரர்களை நான் பார்த்ததே இல்லை. உங்கள் மகள் என்ன படித்திருக்கிறார்? என்று கேட்கிறார். உண்மை தெரியாமல் மாணிக்கம், என் பொண்ணு எம்பிஏ என்று ஏதேதோ சொல்கிறார். உடனே கோபத்தில் சரவணன் கையில் கிடைக்கும் பொருளை வைத்து அடிக்க வருகிறார். பின் பாண்டியன், உங்கள் மகளை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்கிறார்.






