விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அரசி தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். கோபத்தின் உச்சிற்க்கு சென்ற கோமதி, அரசியை பயங்கரமாக வெளுத்து வாங்கினார். மருமகள் எல்லோருமே கோமதியை தடுத்தும் அவரால் ஆத்திரம் தாங்க முடியாமல் அரசியை அடித்தார். அதற்குப் பின் அரசின் மொபைலை எடுத்து செக் பண்ணி இருந்தார்கள். அப்போது குமார் கொடுத்த பரிசு பொருட்களை வீட்டில் கோமதி ஆராய்ந்தார். கிரீட்டிங் கார்டு, மோதிரம், செயின் எல்லாத்தையும் பார்த்துவிட்டு இன்னும் கோமதி கோபப்பட்டார். உடனே அவர், கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டு அரசியை அடித்தார். அரசி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்டில் பாண்டியன் வீடு சோகத்தின் கடலில் மூழ்கி இருந்தது. கோமதி வேதனை தாங்க முடியாமல் அரிசியை திட்டிக் கொண்டிருந்தார். சுகன்யா, எதுவும் சம்மந்தம் இல்லாமல் அமைதியாக இருந்தார். கோபத்தில் பழனி, குமார் வீட்டிற்கு சென்று சண்டை போட்டார். பின் ராஜி அப்பா வீட்டில், குமார்- அரசி காதலிக்கும் விஷயத்தைச் சொன்னவுடன் மொத்த பேருமே ஷாக் ஆனார்கள். உடனே சக்தி, மொத்த சொத்தையும் ஆட்டைய போடுவதற்கு இந்த வேலையை உன் தங்கை செய்தாளா? என்று மோசமாக பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதனால் ஆவேசத்தில் செந்தில்- கதிர், குமாரையும் அவருடைய அப்பாவையும் அடிக்கப் போனார்கள். பயங்கர கலவரம் ஆனது. பின் வீட்டில் உள்ளவர்கள் சண்டையை தடுத்துவிட்டார்கள். அதன் பின் பழனி, குமாருக்கு சொல்லி வையுங்கள். இனிமேல் அரசி பக்கம் வரவே கூடாது என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் அரசி, தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது புலம்பி இருந்தார். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசாமல் நிலை குலைந்து இருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி அப்பா, நீ உண்மையாகத்தான் அரசியை காதலித்தாயா? எதற்காக இதை செய்தாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஆனால், குமாரை உண்மையை சொல்லிவிடக்கூடாது என்று அவருடைய அப்பா சமாளிக்கிறார். பின் பிரச்சனையை திசை திருப்ப சக்தி, பாண்டியன் வீட்டிற்கு வெளியே நின்று ரொம்ப மோசமாக பாண்டியனையும் அவருடைய மகள் அரசியையும் பேசுகிறார். இதையெல்லாம் கேட்க முடியாமல் பாண்டியன் மனம் உடைந்து அழுது கொண்டிருக்கிறார். மொத்த குடும்பமே வேதனையில் தவிக்கிறது.
சீரியல் ட்ராக்:
கோபம் தாங்க முடியாத செந்தில்- கதிர் இருவரும் சக்தியிடம் சண்டைக்கு போகிறார்கள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைகலப்பு ஆகிறது. அதற்குப்பின் அப்பத்தா சண்டையை தடுத்து நிறுத்தி சக்தியும் குமாரையும் உள்ளே அழைத்து செல்கிறார். அதற்குப் பின் ராஜியின் அப்பா, இது நீங்கள் திட்டம் போட்டு செய்தது போல் தான் தெரிகிறது. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் அரசியை காதலிக்கும் விஷயத்தில் தலையிடக்கூடாது. பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று திட்டி அறிவுரை சொல்லி அனுப்புகிறார். பின் குமாரின் அம்மாவும் திட்டுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் வேதனை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேற பார்க்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே, போக வேண்டாம் என்று பாண்டியனை தடுக்கிறார்கள். ஆனால், அவர் யார் பேச்சையும் கேட்கவே இல்லை. பின் அவர், என்னை தொடர்ந்து வந்தால் உயிருடனே பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டு செல்கிறார். வேதனையில் எங்கு செல்வது என்று தெரியாமல் பாண்டியன் நடந்து கொண்டு போகிறார். பின் பாண்டியனை தேடி செந்தில், கதிர் இருவருமே அலைகிறார்கள். அடுத்து என்ன? என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.