அப்பத்தா செய்த வேலையால் கோபப்பட்ட ராஜியின் அப்பா, குழலிக்கு என்ன ப்ரச்சனை? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
341
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மூன்று மருமகள்களுக்கும் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடந்தது. பாண்டியன் வீடு கோலாகலமாக இருந்தது. ஆனால், தங்கமயில் மட்டும் நகையை நினைத்து புலம்பி கொண்டு இருந்தார். அப்போது கோமதி, நகைகளை கொண்டு வந்து தங்கமயில் இடம் கொடுத்தார். உடனே தங்கமயில் அம்மா, ராஜிக்கு கொஞ்சம் நகைகளை எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்ல, கோமதி வேண்டாம் என்றார். பின் மாடியில் தங்கமயில், தன்னுடைய அப்பா- அம்மாவை கூட்டிட்டு போய் எதற்கு இப்படியெல்லாம் செய்கிறீர்கள்.

-விளம்பரம்-

அது கவரிங் என்று தெரிந்துவிட்டால் என்ன செய்வது? என்று புலம்பினாள். இதை எல்லாம் இன்னொரு பக்கம் நின்று இருந்த ராஜி- மீனா இருவருமே கேட்டு விட்டார்கள். பின் அவர்கள் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் அப்பா- அம்மா ஏதோ சொல்லி சமாளிதார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. கடைசியில் தங்கமயில், இதெல்லாம் கவரிங் நகை தான். 8 பவுன் தான் தங்கம். இதனால் தான் நான் பயப்படுகிறேன் என்று உண்மையை சொல்ல, மீனா- ராஜி இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் தங்கமயில், என்னுடைய நகைகளில் முக்கால்வாசி போலி தான். என்னுடைய அப்பா பெரிய பிசினஸ் மேன் எல்லாம் கிடையாது. அவர் வேலை இல்லாமல் சும்மா தான் இருக்கிறார். எனக்கு பல வருடமாக கல்யாணம் ஆகவில்லை. அதனால் தான் பொய் சொல்லி திருமணம் செய்து வைத்தார்கள். இனிமேல் இந்த உண்மை எல்லாம் மறைத்து தினமும் பயந்து பயந்து வாழ முடியாது. நீங்கள் இதை மாமாவிடம் சொன்னாலும் எனக்கு பிரச்சினை இல்லை என்றார்.

நேற்று எபிசோட்:

உடனே மீனா- ராஜி இருவருமே நீங்கள் செய்தது தவறு. மாமா நகைக்கு முக்கியதுவம் கொடுத்ததில்லை. இருந்தாலுமே உங்களுடைய வாழ்க்கையை கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றார்கள். பின் நல்லபடியாக மூவருக்குமே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்தது. இதையெல்லாம் அப்பத்தா, ராஜி அம்மா இருவரும் வெளிய நின்னு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் ராஜி – கதிரை பார்த்து சந்தோஷப்பட்டார்கள். அப்போது ராஜி அப்பா வந்தார். ஆனால், அவர் எதுவும் பேசாமல் அமைதியாக போய் விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, ராஜி- கதிர் இருவரையுமே ஆசிர்வாதம் செய்கிறார். இதை எல்லாம் பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. உடனே கோமதி, தன்னுடைய மற்ற இரண்டு மகன்கள், மருமகளை ஆசீர்வாதம் வாங்க அழைத்து வந்தார். எல்லாரையும் அப்பத்தா ஆசீர்வாதம் செய்தார். அந்த சமயம் வந்த ராஜியின் சித்தப்பா, இதை பார்த்து கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் அப்பத்தா மற்றும் இரண்டு மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. கடைசியில் உறவை சேர்க்க நினைக்காதே, நான் செத்ததற்கு சமம் என்று ராஜி அப்பா சொல்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, தன் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கியதை நினைத்து ரொம்ப சந்தோசப்படுகிறார். பின் பாண்டியன், என்ன தான் உன் வீட்டில் ப்ரச்சனை என்று குழலியிடம் கேட்கிறார். உடனே அவர், எல்லோரும் என்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கதறி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement