விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜியின் சித்தப்பா பாண்டியனை வம்பிழுத்து, அவனுடைய குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார். அப்போது ராஜி, நான் டியூஷன் எடுப்பது என்னுடைய விருப்பம். உங்கள் மகன் ரொம்ப யோக்கியமா? எங்களை கடத்தி வைத்திருந்தான் என்று சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டு ராஜி அண்ணன் சக்தியை வெளுவெளு என்று வெளுத்தார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, தன் அண்ணன் இடம் வாக்குவாதம் செய்தார்.

பின் வீட்டில் ராஜி, சக்தி எங்களை கடத்த வரவில்லை. தங்க மயிலை கடத்த பார்த்தார் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் அய்யய்யோ என்று பதறி இருந்தார். மேலும், கடையில் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே நடந்ததை பற்றியும், சக்தி என்ன செய்வான்? என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனே பாண்டியன், எல்லோரும் வேலையை பாருங்கள். அவன் எதுவும் செய்ய மாட்டான் என்று சமாதானம் செய்து அனுப்பி விட்டார். மேலும், வீட்டில் தங்கமயில், தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி விட்டு அலப்பறை செய்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கடைசியில் அனைவரும் பாண்டியனை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட கூப்பிட்டார்கள். ஆனால், பாண்டியன், கோபத்தில் போய் தூங்குங்கள். வேற வேலை இல்லையா என்று திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனின் பிறந்த நாளுக்காக தயாராகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன், உள்ளே வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் கத்த, பாண்டியன் அதிர்ச்சியாகி நின்றார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பாண்டியன், வீட்டை எதற்கு இப்படி குப்பை ஆக்குகிறீர்கள்? ஏன் இந்த தேவை இல்லாத வேலை? என்று கேட்டார். உடனே அவருக்கு எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியனை கேக் வெட்டி கொடுத்தார். அப்போது பாண்டியன் ஆனந்த கண்ணீரில், இதுவரை என் வாழ்க்கையில் யாரும் இப்படி செய்ததில்லை என்று சொன்னதற்கு கோமதி, இதையெல்லாம் உங்கள் மூன்று மருமகள்களும் செய்தது தான் என்று சொன்னார்.

பாண்டியன் பிறந்தநாள்:
அதற்குப்பின் பாண்டியனுக்கு வாங்கி வைத்த கிப்ட்டை கொடுதார்கள். பாண்டியன் அதை பிரித்து பார்த்து சந்தோஷப்பட்டார். இருவருமே தங்களுக்கு கொடுத்த புது துணியை அணிந்து கொண்டு பைக்கில் போனார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், மொத்த பாண்டியன் குடும்பமே கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சமயம் பாத்து கோமதியின் அண்ணன், சக்தி இருவருமே வருகிறார்கள். அவர்களை பார்த்து பாண்டியன், என்னை யாரையும் இனிமேல் அனாதைன்னு சொல்ல முடியாது.

இன்றைய எபிசோட்:
எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது என்று பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசுகிறார். இதையெல்லாம் கேட்ட கோமதியின் அண்ணன் கோபப்படுகிறார். அப்போது அவர், நம்ம வீட்டு பெண்ணை தூக்கி அசிங்கப்படுத்தியது போல் அவருடைய மகளை தூக்குடா, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்ல, சக்தியும் தன் அப்பா சொன்னதற்கு சம்மதிக்கிறார். கடைசியில் வீட்டில் பாண்டியன் மனநிறைவுடன் எல்லோருடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு சாப்பிடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






