விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் மீது இருந்த கோபத்தில் செந்தில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லாமல் கல்லாவிலிருந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பொய் கணக்கு எழுதி வைத்தார். இதை பார்த்த பழனி ஷாக் ஆகி இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்மந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுத்து இருந்தார். கோபத்தில் அவர்கள் மீனாவிடம் சண்டை போட்டு மிரட்டி விட்டு சென்றார்கள்.

செந்தில், மீனாவிற்காக ஹேண்ட் பேக்கை பார்த்து பார்த்து ஆசை ஆசையாக வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் திருடனுக்கு பயந்து சிசிடிவி கேமராவை பொருத்தி அதை பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார் பாண்டியன். அதற்குப்பின் செந்தில், தான் வாங்கின ஹேண்ட் பேக்கை மீனாவிடம் கொடுத்தார். அவரும் அதை பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டார். பின் பாண்டியன், தூங்காமல் கூட சிசிடிவி கேமராவை பார்த்துக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது கேமரா இருட்டாக தெரிகிறது என்று ஒரே ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார். நேற்று எபிசோட்டில் கேமரா வேலை செய்யவில்லை என்றவுடன் கதிர் வெளியே போய் செக் பண்ணி பார்த்தார். அங்கு கேமரா மீது கொசு உட்காந்திருந்தது. அதை துரத்தி விட, கேமரா தெளிவாக தெரிந்தது. பின் தங்கமயில், சரவணன் தன்னுடைய பிறந்தநாளுக்கு எந்த ஒரு பரிசுமே கொடுக்கவில்லை என்று வேதனைப்பட்டார். பின் ராஜி, கண்ணனை துரத்தும் வீடியோவை கதிர் பார்த்து கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது ராஜி, என்ன வீடியோ? என்று கேட்டதற்கு, எவ்வளவு வேகமாக ஓடுகிறாய் என்றார் கதிர். அதற்கு ராஜி, நான் அத்தலட் பிளேயர். எனக்கு போலீசாக வேண்டும் என்று தான் ஆசை என்று சொன்னவுடன் கதிர் ஆச்சரியப்படுகிறார். பின் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்ற கதிர், நீ என்னை விட ஓடி வெற்றி பெற்றால் நீ சொல்வதை நான் கேட்கிறேன் என்றவுடன் ராஜி பந்தயத்திற்கு தயாரானார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்- ராஜ் இருவருமே ரன்னிங் ரேஸ் ஓடுகிறார்கள்.

இன்றைய எபிசோட்:
அதில் ராஜி வெற்றி பெற்று விடுகிறார். ராஜியின் ஓட்டத்தைக் கண்டு பிரமித்து போன கதிர், நீ எப்படியாவது போலீசாக வேண்டும். நான் உன்னை ஆக்குகிறேன். நீ தினமும் பிராக்டிஸ் செய். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். முதலில் ராஜி மறுத்தாலும் கதிர் சொன்னதால் ஒத்து கொள்கிறார். பின் ராஜி-கதிர் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து ராஜி அம்மா சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து பேசுகிறார். அப்போது பாண்டியன், பழனிக்கு பெண் பார்த்து இருக்கிறேன். நல்ல குடும்பம், பெண் நல்ல படித்திருக்கிறார். மரியாதை தெரிந்த பெண். அவர் பெயர் மஞ்சுளா. பெண் வீட்டிற்கு போகலாம் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பழனி, குஷியில் வெட்கப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






