விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில், தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளித்ததால் பாண்டியனும் அமைதியாக விட்டார்.

பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைப்பதால் எல்லோரையும் அழைக்க, பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்தார். இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா செய்த வேலையை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அவர்களும் மன்னிப்பு கேட்க, தங்கமயில் பயங்கரமாக தன்னுடைய அப்பா, அம்மா மீது கோபப்பட்டு கத்தி இருந்தார். பின் கோமதி, கோவிலுக்கு எல்லோரும் சீக்கிரமாக தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், ஒவ்வொரு ஜோடியுமே கோயிலுக்கு கிளம்புவதற்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே கோவிலுக்கு சென்றார்கள். எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தங்கமயில் பயந்து கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் தங்க மயிலின் அப்பா, அம்மா கோயிலுக்கு சென்று விட்டார்கள். பின் அங்கு வருபவர்களிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளித்தார்கள். அப்போது வந்த பாண்டியனின் மூத்த மகள் வழக்கம் போல் கேள்வி கேட்க, தங்கமயில் அம்மாவும் சமாளித்தார்.

நேற்று எபிசோட்:
பின் பாண்டியன் குடும்பமும் கோவிலுக்கு வந்ததால் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்தார்கள். எல்லோருக்கும் தங்கமயில் சாப்பாடு பரிமாறி இருந்தார். பின் பாண்டியன் ஓரிடத்தில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தார். அந்த இடத்திலிருந்த கூரை அவர் மீது சரிந்து விழ பார்த்தது. உடனே தங்கமயில் அவரை தள்ளிவிட்டு காப்பாற்றுகிறார். ஆனால், தங்கமயில் மேல் அந்த கூரை விழுந்ததால் மொத்த பேருமே பதறி போனார்கள். தங்கமயிலின் தலையில் அடிபட்டு இருந்தது. இதனால் பாண்டியன் எமோஷனலாக ஃபீல் பண்ணி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே தங்கமயிலின் உடல்நலத்தை விசாரிக்கிறார்கள். அவர் செய்த வேலையை நினைத்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். பாண்டியன், கோமதி இருவருமே கோபத்தை மறந்து தங்கமயில் இடம் பேசுகிறார்கள். அதற்கு பின் தங்கமயில் ரெஸ்ட் எடுக்கப் போகிறார். அப்போது கதிர், மாத சம்பளத்தை கொடுக்க, பாண்டியன் எதுவும் பேசாமல் வாங்கிக் கொள்கிறார். இது தான் சந்தர்ப்பம் என்று ராஜி, டியூஷன் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தன்னுடைய மாமியாரை வழக்கம் போல் மிரட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு அவரும் அவகாசம் கேட்கிறார். அதற்குப்பின் ரூமில் கதிர், ராஜிக்கு பணம் கொடுக்க, அவர் வேண்டாம் என்று சொல்கிறார். பின் தன் டியூஷன் விஷயத்தை எப்படியாவது மாமாவிடம் சொல்லி விடுவேன் என்கிறார் ராஜி. இன்னொரு பக்கம் கோமதி, எப்படியாவது ராஜி டியூஷன் விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று நடந்து கொண்டே இருக்கிறார். அப்போது பாண்டியன், தூங்கப் பார்க்கிறார். உடனே கோமதி, பேசலாமே என்று சொல்லி ஏதேதோ கதையை சொல்கிறார். ஆனால், பாண்டியன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின் தன்னுடைய மகன் கொடுத்த சம்பளத்தை அக்கவுண்டில் போட சொல்கிறார். எல்லோருடைய சம்பளத்தையும் அவர்கள் அக்கவுண்டில் போடுவதை நீங்கள் நேரடியாகவே சொல்லலாமே, ஏன் மறைக்கிறீர்கள்? என்று கோமதி கேட்க, அவர் எதுவுமே பேசவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






