விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில், பாண்டியன் சொன்னதை நினைத்து பார்த்து பணத்தை மீனா அப்பாவிடம் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பாண்டியன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சரவணன், தங்கமயில் ஊருக்கு கிளம்பி வரும் விஷயத்தை சொன்னார். உடனே பாண்டியன், எதற்கு ஏன்? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் வந்து விட்டார். அப்போது அவர், வேலையில் லீவு கிடைக்கவில்லை. அதனால் வந்து விட்டேன் என்று சொன்னார். உடனே பாண்டியன், அந்த வேலையே வேண்டாம். லீவு எதுவுமே கிடைக்கவில்லை. ரொம்ப லேட்டாக வருகிறாய் என்று சொல்லிவிட்டார்.

அதற்கு பின் சரவணன், நீ படித்த கல்லூரி, ஸ்கூல் என எல்லா டீடைலும் எனக்கு கொடு. நான் உனக்கு சர்டிபிகேட் ரெடி பண்ணி தருகிறேன் என்று சொன்னவுடன் தங்கமயில் ரொம்பவே பதறி இருந்தார். இன்னொரு பக்கம் நடன போட்டியில் கலந்து கொள்ள ராஜி பெயர் கொடுத்தார். பின் போட்டியில் ஒவ்வொருவருமே சிறப்பாக நடனமாடி இருந்தார்கள். அப்போது ராஜி மேடைக்கு வந்த உடனே அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் வெளியூர் ஆட்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கத்தி இருந்தார்கள். ராஜிக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அமைதியாக நின்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜி நடனம் ஆடக்கூடாது என்று அந்த ஊர் இளைஞர்கள் பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கோமதியும் ராஜி நடனம் ஆட வேண்டாம் என்று சொன்னார். ஆனால், ராஜி எப்படியாவது கதிருக்கு பைக் வாங்க வேண்டும் என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி டான்ஸ் ஆடினார். இதை பார்த்து மொத்த ஊர் மக்களுமே அசந்து போய் விட்டார்கள். பின் கோமதி, இதோடு போதும் மீண்டும் நடனமெல்லாம் ஆட தேவையில்லை என்று திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் தங்களுடைய கட்டிடத்தை மீனா இடித்தது பற்றி சக்திவேல் தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:
உடனே முத்துவேல், மீனாவை வேலையை விட்டு தூக்கு என்று தன்னுடைய தம்பிக்கு ஐடியா கொடுத்தார்.
பின் அரசிக்கு மாப்பிள்ளை மெசேஜ் போட்டிருந்தார். அதை அரசி தன்னுடைய அண்ணிகளிடம் காண்பித்தார். அதில் மாப்பிள்ளை, எனக்கும் சின்ன வயதில் ஒரு கிரஷ் இருந்தது. இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவருமே நடன போட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டார். ஆனால், கோமதி நடனப் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று கோபப்பட்டார். என்ன செய்வது என்று புரியாமல் ராஜி -மீனா இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாப்பிள்ளை போட்ட மெசேஜை பற்றி மீனா- ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, அவர் ரொம்ப நல்லவர். தயவு செய்து அவரை ஏற்றுக்கொள் என்று அரசிக்கு அறிவுரை சொல்கிறார். அரசியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார். மறுநாள் காலையில் நடன போட்டிக்கான இரண்டாம் சுற்று நடைபெறுகிறது. ராஜி எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று மீனாவிடம் சொல்கிறார். அதற்கு மீனா, நீ அரசியை அழைத்துக் கொண்டு கிளம்பு. நான் அத்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் கோமதி கோயிலுக்கு கிளம்பலாம் என்று மீனாவை கூப்பிட, மீனா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். கடைசியில் ராஜி நடன போட்டிக்கு சென்ற விஷயம் கோமதிக்கு தெரிகிறது. அதை தடுத்து நிறுத்த கோவிலுக்கு கோமதி வருகிறார். ஆனால், ராஜி அதை கண்டுகொள்ளாமல் மேடையில் ஏறி நடனமாடுகிறார். ராஜி நடனத்தை பார்த்து ஊரில் உள்ள எல்லோருமே கைத்தட்டி கொண்டாடுகிறார்கள். கோமதியும் மனது மாறி ராஜியை பாராட்டுகிறார். எல்லோருமே ராஜிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். இன்னொரு பக்கம் குமார், அரசி இருக்கும் இடத்தை அறிந்து வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






