சொத்துக்காக ராஜியின் சித்தப்பா போடும் மாஸ்டர் பிளான், சக்தி என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
91
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கதிர் தனக்காக சப்போர்ட் செய்து பேசுவது எல்லாம் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் கதிர் பேசியதற்கு கோபப்பட்டு ராஜியை திட்டி இருந்தார் கோமதி. உடனே மீனா, கோமதிக்கு ஐஸ் வைத்து அவருடைய மனதை மாற்றி கதிர்-ராஜி பக்கம் இருக்கும் நியாயத்தை புரிய வைத்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், தங்கமயில் வீட்டில் சீர்வரிசை செய்ய வருகிறார்கள் என்று சொன்னார்.

-விளம்பரம்-

இதைக் கேட்டவுடன் மீனாவின் முகம் வாடியது. இதை அறிந்த செந்தில் அவருக்கு ஆறுதல் சொன்னார். உடனே மீனா, என்னுடைய அம்மா தனியாக சந்தித்து பணம் கொடுத்தார். ஆனால், எனக்கு அதில் வாங்க விருப்பமில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நேற்று எபிசோட்டில் பாண்டியன், அரசி கல்லூரிக்கு செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது சக்தி, பஸ் பிரேக் டவுன் ஆகிவிட்டது. நான் உன்னை கொண்டு போய் விடுகிறேன்.என்னுடன் வா என்று சொல்ல, அரசி திட்டி இருந்தார்.
சக்தி, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் இரண்டு குடும்பமும் சேர்ந்து விடும் என்றெல்லாம் பேசி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே கோபத்தில் அரசி, என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்கிறேன். ஒழுங்கு மரியாதையாக கிளம்பு என்று சொன்னவுடன் சக்தி சென்று விட்டார். ஆனால், இதைப்பற்றி அரசி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் தங்க மயிலின் அப்பா, அம்மா இருவருமே சீர் செய்வதற்காக வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது தங்கமயில் அம்மா, எங்கள் மகளுக்கு நாங்கள் இருக்கிறோம். மீனா- ராஜுக்கு யாருமே இல்லை என்று நக்கலாக பேசி இருந்தார்கள். இதனால் இருவருடைய முகமும் மாறியது.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பாண்டியன், வீட்டில் எல்லோருமே ஜோடி ஜோடியாக சந்தோஷமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சக்தி, அரசிக்கு ரூட் விட்டு கொண்டிருந்தார் ஆனால், அரசி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் எல்லோரும் பொங்கல் பண்டிகைக்காக புது ஆடை அணிந்து சந்தோஷமாக பொங்கல் வைத்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா இருவரும் கோபப்பட்டார்கள். அதற்குப் பின் அரசியை பார்த்தவுடன் சக்தி சிரித்தார். பின் எல்லோரும் பொங்கல் வைத்து வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக மூன்று மருமகள் வைத்த பொங்கலுமே பொங்குகிறது. இதை பார்த்து ராஜியின் சித்தப்பா கோபப்படுகிறார். அவர்களுடைய பொங்கல் தாமதமாக தான் பொங்கியது. பின் எல்லோருமே பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி முடிக்கிறார்கள். அப்போது பாண்டியன், ஒரு சாமியார் மூலம் என்னுடைய குலதெய்வம் எது என்று தெரிந்தது? நாம் எல்லோருமே குலதெய்வ கோயிலில் போய் பொங்கல் வைக்கலாம். குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். தட புடலாக சாப்பாடு இருக்கணும் என்று ரொம்ப சந்தோஷமாக பாண்டியன் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ராஜி சித்தப்பா, என் மகனுக்கு கல்யாணம் நடக்கல. ராஜி செய்த வேலையால் என் மகன் அவஸ்தை படுகிறான் என்று புலம்புகிறார். உடனே ராஜி அப்பா, நான் எப்படியாவது கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். பின் சக்தியின் அப்பா, நீ அரசியை தான் கல்யாணம் செய்து கொள்ளணும். என் அண்ணன் இடம் ராஜியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் தான் அவர் மனம் மாறமாட்டார். அப்போ தான் சொத்து முழுக்க உன் பேருக்கு வரும் என்று மாஸ்டர் ப்ளான் போடுகிறார். இதை அறிந்த சக்தியும் தன்னுடைய அப்பாவின் திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement