விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் அவரை துரத்த, கண்ணன் தப்பித்து வேகமாக ஓடினார். பின் இதை பற்றி ராஜி, கதிரிடம் சொல்ல, இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். பின் இந்த விஷயத்தை வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றார் கதிர். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்த தங்கமயில் அப்பா- அம்மா, தாலி பிரித்து கோர்ப்பது பற்றி பேசி இருந்தார்கள். உடனே கோமதி, மற்ற இரண்டு மருமகளுக்குமே தாலி பிரித்து கோர்த்து விடலாம் என்று சொன்னார்.

அதற்கு பாண்டியன், மூவருக்கும் ஒரே நாளில் வைக்கலாம் என்று சொன்னார். பின் தங்கமயில் அம்மா, நாங்கள் என்னுடைய மகளுக்கு எல்லாம் செய்வோம். மற்றவர்களுக்கு யார் செய்வார்கள்? என்று சொன்னவுடன், பாண்டியன் கோபப்பட்டு மூன்று பேருமே என்னுடைய மகள்கள் தான். நானே செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் தங்கமயிலின் அப்பா- அம்மா பெருமூச்சு விட்டார்கள். அதன் பின் அரசி வீட்டிற்கு வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தி, அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க, இதை எல்லாம் கவனித்த ராஜி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. உடனே சக்தி கோபத்தில் ராஜியை அடிக்க போனார்.
நேற்று எபிசோட்டில் அங்கு வந்த ராஜி அப்பாவிடம் சக்தி செய்த வேலையை சொன்னவுடன், அவர் கோபப்பட்டு சக்தியை திட்டி இருந்தார். உடனே கோபத்தில் சக்தியின் அப்பா, என் பையன் மீது எந்த தவறும் இல்லை. ராஜி தான் பொய் சொல்லுவாள் என்று சொல்ல, அண்ணன் - தம்பி இருவருக்குமே வாக்குவாதம் அதிகமானது. இதனால் நெஞ்சு வலி வந்தது போல அவருடைய அம்மா மீண்டும் நடித்தார். இதனால் அவர்கள் சண்டையை விட்டு அமைதியாகி விட்டார்கள்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் குழலி, மூன்று மருமகள்களை வேலை வாங்கியும் அதிகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோமதி, தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு தங்கமயில்- மீனா நகைகளை எடுக்க பேங்கிற்கு போனார். உடனே தங்கமயில், நானும் வருகிறேன் என்று சொன்னவுடன் குழலி, நீ வேண்டாம். வீட்டு வேலையை பார் நான் போகிறேன் என்று சொல்ல, தங்கமயில் ரொம்பவே பயந்தார். இந்த நிலையில் இன்று எபிசோடில், நகைகளை பேங்கில் இருந்து கோமதி எடுத்து வருவதைப் பற்றி தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்புகிறார்.
இன்றைய எபிசோட்:
அதற்கு தங்கமயில் அம்மா, அவருக்கு ஆறுதல் சொல்லி ஏதாவது சமாளி என்கிறார். அப்போது மீனா வந்ததால் தங்கமயில் ஃபோனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது சக்தி அவரிடம் பேச முயற்சிக்கிறார். சக்தி எவ்வளவோ பேசியும் அரசி எதுவுமே பேசவில்லை. அங்கு வந்த செந்திலை பார்த்தவுடன் சக்தி கிளம்பி வருகிறார். உடனே செந்தில், அரசிடம் விசாரிக்க, அவர் நடந்ததை சொன்னவுடன் அறிவுரை சொல்லி அழைத்துக் கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் பின் கதிர்-ராஜி இருவருமே கண்ணனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது வந்த மீனாவிடம் நடந்த விஷயத்தை பற்றி ராஜி சொல்ல, அவர் ஷாக் ஆனார். பின் கோமதி- குழல் இருவருமே பேங்கில் இருந்து நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். இதை பார்த்து தங்கமயில் ரொம்பவே பதட்டமாக இருக்கிறார். இதையெல்லாம் மீனா கவனிக்கிறார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜியை அழைத்து அவர் செய்த சாகசத்தை பற்றி விசாரிக்கிறார். இதனால் ராஜி, பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாகவே இருந்தார். இத்துடன் சீரியல் முடிகிறது.






