விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், வழக்கம் போல சரவணன் மீதுதான் தவறு என்பது போல புது கதையை சொன்னார். இதை நம்பி கோமதி- பாண்டியன் இருவருமே சரவணனை தான் திட்டினார்கள். அதற்குப் பின் கோமதி-பாண்டியன் இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது வழிமறித்த காந்திமதி, பழனி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அவருடைய அண்ணன்கள் கடை வைத்து தர இருக்கிறார்கள் என்றார். இதைக் கேட்டு பாண்டியன் ஷாக் ஆனார்.

காந்திமதி, நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று தான் பழனி நினைத்தார். பழனி தனியாக கடை வைக்க உங்களுக்கு சம்மதமா? என்றார். அதற்கு பாண்டியன், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் நல்லபடியாக வந்தால் சந்தோஷம்தான் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோமதி, புதிதாக மளிகை கடை ஆரம்பிப்பதை பற்றி கேட்டார். அதற்கு பழனி, அண்ணன்கள் தான் இதை ஏற்பாடு செய்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று சொன்னார். அதற்கு கோமதி, நீ வாழ்க்கையில் முன்னேறினால் எனக்கு சந்தோசம் தான். நீ முன்னேற வேண்டாம் என்று நினைப்போமா? என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் சமைக்கவில்லை என்று செந்தில் சண்டை போட்டார். அதற்கு மீனா, நான் ஆபீசிலும் வேலை செய்துவிட்டு வீட்டிலும் என்னால் தனியாக வேலை செய்ய முடியாது. நீங்கள் உதவி செய்தால் நான் செய்யப்போகிறேன் என்றார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி அங்கிருந்து கிளம்பி வந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன், நீ தனியாக கடை ஆரம்பித்தால் எனக்கு சந்தோஷம்தான். நல்லபடியாக தொடங்கு. நாங்கள் எப்போதும் உனக்கு சப்போர்ட்டாக இருப்போம் என்று மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல் பழனிக்கு வாழ்த்துக்கள் சொன்னார். இதை கேட்டு பழனிக்கு சந்தோசமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், தங்கமயில் இல்லாத நேரம் பார்த்து ஆதார் கார்டு கேட்க, மாணிக்கம் தந்து விடுகிறார். அதில் தங்கமயில் தன்னைவிட இரண்டு வயது பெரியவள் என்று தெரிந்தவுடன் சரவணன் ஷாக் ஆகிறார். பின் யாரிடமும் அதைப்பற்றி பேசாமல் தங்கமயிலை அழைத்துக் கொண்டு தனியாக வருகிறார் சரவணன். தங்கமயிலுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் சரவணன், உனக்கு உண்மையிலேயே வயது என்ன? இன்னும் என்னிடம் என்னென்ன எல்லாம் மறைத்திருக்கிறாய்? என்று கேட்கிறார். தங்க மயிலுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. நான் எதையும் மறைக்கவில்லை என்று சமாளிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே ஆதார் கார்டை சரவணன் காண்பிக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், இது என்னுடைய கார்டே இல்லை என்று பொய் சொல்கிறார். கோபத்தில் சரவணன், இன்னும் எவ்வளவுதான் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவாய். மொத்த குடும்பமே இப்படித்தான் ஏமாற்றுக்காரர்களா? இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று பயங்கரமாக கத்துகிறார். பயந்து போன தங்க மயில் கெஞ்சி கதறி அழுகிறார். ஆனால், சரவணன் கேட்கவில்லை. இன்னியோடு உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன். வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல்கிறேன். வண்டியில் ஏறி என்று தங்கமயிலை அழைத்துக் கொண்டு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






