விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி- மீனா இருவருமே எப்படியாவது கோயிலில் மாப்பிள்ளை இடம் அரசி படிப்புக்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோமதி வந்து விட்டார். பின் மூவருமே சேர்ந்து கோவிலுக்கு சென்றார்கள். மாப்பிள்ளையும் தன்னுடைய அம்மாவுடன் கோயிலுக்கு வந்து இருந்தார். என்ன நடக்குமோ என்று கோமதி மீனா புலம்பி கொண்டிருந்தார். ஒரு பக்கம் கோமதியை ராஜி சமாளித்தார். இன்னொரு பக்கம் மீனா, மாப்பிள்ளையும் அவர் அம்மாவையும் சமாளித்தார். இருவரையும் சந்திக்க விடாமலும், அரசி படிப்பு விஷயம் எப்படியாவது மாப்பிள்ளை இடம் சொல்ல வேண்டும் என்றும் மீனா நினைத்தார்.

கோவிலில் மாப்பிள்ளை அம்மாவும், கோமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே மாப்பிள்ளை அம்மா, மீனா அவர்கள் தான் கிரியேட்டிவிட்டியாக கல்யாணம் பண்ண வர சொன்னார் என்று சொன்னவுடன் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். மீனா-ராஜி இருவருமே மாட்டிக்கொண்டோம் என்று பயப்பட்டார்கள். அதற்கு பின் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சென்ற மீனா, நாங்கள் அரசி படிப்பு விஷயமாக பேச தான் அழைத்தோம். திருமணத்திற்கு பிறகும் அவள் படிக்க வேண்டும். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்க, மாப்பிள்ளையும் ஒத்துக்கொண்டார். வந்த வேலை நல்லபடியாக முடிந்தது என்று நினைத்து மீனா சந்தோஷப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் கோமதி, எதற்காக மாப்பிள்ளை வீட்டில் வர வைத்தீர்கள்? கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறீர்களா? என்று ராஜி- மீனா இருவரிடமும் சண்டை போட்டார். அப்போது மீனா, அரசி படிப்பு விஷயமாக பேசத்தான் வர சொன்னோம். மாப்பிள்ளையும் ஒத்துக்கொண்டார் என்று சொன்னவுடன் கோமதி அமைதியாகி விட்டார். அதற்கு பின் கோயிலில் நடந்ததை பற்றி எல்லாம் பாண்டியன் இடம் கோமதி சொன்னார். அப்போது வீட்டிற்கு மாப்பிள்ளையும் அவருடைய அம்மாவும் வந்தார்கள். அப்போது மாப்பிள்ளையின் அம்மா, கல்யாண விஷயமாக பேச தான் வந்தேன். நகை போடுவதைப் பற்றி பேச வந்தேன் என்று சொன்னவுடன் பாண்டியன் ஷாக் ஆனார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் மாப்பிள்ளை அம்மா, பொண்ணுக்கு நீங்கள் விருப்பப்பட்ட நகையை போடுங்கள். மாப்பிள்ளைக்கு கார் வாங்கி கொடுங்கள். கல்யாணத்தை ரொம்ப கிராண்டாக நடத்துங்கள். அப்பதான் ஊர் மக்கள் பெருமையாக இருக்கும். எதையும் குறை வைக்காதீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியனுக்கு இடி மேல் இடி விழுந்தது. எதுவும் பேச முடியாமல் பாண்டியன் சம்மதம் சொன்னார். பின் தன்னுடைய அம்மாவிடம் மாப்பிள்ளை, எதற்காக இப்படி கேட்கிறீர்கள்? அவர்கள் விருப்பப்படி செய்யட்டும்.

சீரியல் ட்ராக்:
நீங்கள் எதுவும் கேட்டு வாங்காதீர்கள் என்று கோபப்பட்டார். இன்னொரு பக்கம் ஆபீஸில் மீனா, சட்டவிரோதமான கடைகளை இடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார் . அப்போது சக்திவேல் கடையை இடிக்கவில்லை என்று மற்றொரு அதிகாரி சொன்னார். உடனே மீனா, கடையின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஆர்டர் போட்டார். பின் வீட்டில் மூன்று ஜோடிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், மாப்பிள்ளையின் அம்மா கேட்ட வரதட்சணையை பற்றி சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். உடனே பாண்டியன், நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னார்.
https://www.youtube.com/watch?v=PUcD0zLnz_E
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சரவணன் தன்னுடைய நண்பருடன் சாப்பிட வருகிறார். சரவணன் இருப்பது தெரியாமல் தங்கமயில் ஆர்டரை எடுத்துக் கொண்டு வந்து பரிமாறுகிறார். இதை பார்த்தவுடன் சரவணன் கோபப்படுகிறார். தங்கமயிலும் அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். பின் சரவணன், எதற்காக பொய் சொன்னாய் என்று கேட்டவுடன் நான் சொல்ல வருவதை கேளுங்கள் என்று தங்கமயில் சொல்கிறார். ஆனால், சரவணன் அதை கேட்காமல் வீட்டிற்கு செல்கிறார்.






