விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, பரிசு வாங்கிய பைக் வீட்டிற்கு வருவதால் ரொம்ப சந்தோஷத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ராஜியின் பைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பைக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தார்கள். பைக்கை பார்த்து எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். பின் கதிர், பைக்கை எடுத்து எல்லோரையும் ரவுண்ட் கூட்டிட்டு போனார். ஆனால், ராஜியை மட்டும் ஏற்றவில்லை. இதனால் ராஜி ரொம்பவே வருத்தப்பட்டார். பின் செந்தில் இடம் பைக்கை பற்றி பெருமையாக கதிர் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் அரசி கல்யாண பத்திரிகையை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டுக்கு வந்த சரவணன், நான் வேலை செய்யும் இடத்தில் பத்திரிக்கை வைக்க வேண்டும். தங்கமயில் கிளம்பு என்றார். தங்க மயிலும் ரொம்ப சந்தோசமாக தயாராகி வந்தார். அப்போது சரவணன், நான் பத்திரிக்கை வைக்க போகவில்லை. உன்னுடைய கல்லூரிக்கு போகிறோம் என்று சொன்னவுடன் தங்கமயில் ஷாக் ஆனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன், தங்கமயில் சொன்ன கல்லூரிக்கு வந்தார். அப்போது உள்ளே வராமல் தங்கமயில் தயங்கி இருந்தார். இருந்தும் விடாமல் சரவணன், தங்கமயிலை அழைத்து போனார். ஒரு கட்டத்தில் பயத்தில் தங்கமயில் வெளியே வந்தார். அப்போது சரவணன், என்ன ஆனது? ஏன் வர மறுக்கிறாய்? வேற கல்லூரியா? என்று கேட்டார். வேறு வழி இல்லாமல் தங்கமயில் நடந்த உண்மை எல்லாத்தையும் சொல்லி விட்டார். நான் காலேஜ் போகவில்லை. நான் 12ஆம் தான் படித்திருக்கிறேன். வீட்டில் பொய் சொல்லி தான் என்னை திருமணம் செய்து வைத்தார்கள். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
இதைக் கேட்டவுடன் சரவணனுக்கு இடிமேல் இடி விழுந்தது. தங்கமயில் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். ஆனால், சரவணன் அதை கேட்காமல் கோபத்தில், இதோடு உன் மேல் இருந்த நம்பிக்கை போனது. இனி நம் உறவு முடிந்து விட்டது என்று அங்கிருந்து சென்று விட்டார். தங்க மயில், என்ன செய்வது என்று புரியாமல் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியின் மனதை மாற்ற முயற்சி செய்தார். ஆனால், அரசி கேட்கவில்லை. அப்போது போன் செய்த மாப்பிள்ளை சதீஷ், அரசிடம் பேசி இருந்தார். அரசியும் சதீஷிடம் நன்றாக பேசினார். இதை கேட்டு சுகன்யா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் என்ன செய்வதென்று புரியாமல் தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்கிறார். அதற்கு அவர், எதற்கு உண்மை சொன்னாய்? என்று திட்டுகிறார். வேறு வழியே இல்லை என்று தங்கமயில் அழுகிறார். அதற்கு பின் அந்த இடத்திற்கு வந்த சரவணன், உன் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. நீ எது சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். இதனால் வீட்டில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் நான் வந்தேன். இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது. அரசி கல்யாணம் முடியட்டும் என்று தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், தங்கமயில் இனி வேலைக்கு போக வேண்டாம். கல்யாணம் முடியும் வரை அம்மாவுடன் இருக்கட்டும் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்று ஒத்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பைக்கில் தன்னை கதிர் அழைத்து போகாது நினைத்து ராஜி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது வந்த கதிர், ராஜியை எழுப்பி பைக்கில் அழைத்து லாங் ட்ரைவ் செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






