விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீ இவ்வளவு மோசமானவள் என்று எனக்கு தெரியாது என்று தங்கமயிலை திட்டி விட்டு சென்றார். ராஜி, கதிர் இருவருமே டிராவல்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், பழனியை ட்ராவல்சை பார்த்துக்க சொல்லிவிட்டு ராஜியை அழைத்துக் கொண்டு வெளியே போனார். முதலில் துணி கடைக்கு சென்று ராஜிக்கு தேவையான துணிகளை எல்லாம் கதிர் வாங்கி தந்தார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலுக்கு போனார்கள். பின் தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்த கதிர், சாப்பாடு வேண்டாம் என்றார்.

கோமதி, இருவரும் வெளியில் சென்று இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டார். பின் இதைப்பற்றி சுகன்யா கேள்வி கேட்டார். அதற்கு கோமதி, வெளியில் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கட்டும் என்று சொன்னார். பின் சுகன்யா- தங்கமயில் இருவருமே பொறாமைப்பட்டு வயிறு எறிகிறார்கள். தங்க மயிலுக்கு ஆத்திரம் அடக்கவே முடியவில்லை. வார்த்தைகளால் சுகன்யாவிடம் கொட்டி விட்டார். அதற்குப்பின் ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு கதிர்-ராஜி இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள். மீனா வழக்கம் போல எந்த சாப்பாடும் செய்யவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் பார்த்து மீனாவின் அப்பா, அம்மா இருவருமே வந்துவிட்டார்கள். என்னதான் நினைத்திருக்கிறாய் என்று அவர் அம்மா கேட்டார். அதற்கு மீனா, நான் சீக்கிரமாகவே என் மாமியார் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று சொல்வதால் மீனாவின் அம்மாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் செந்தில், என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதற்குப்பின் பழனி- சுகன்யா இருவருமே முத்துவேல் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது சுகன்யா, பணம் காணவில்லை என்று பாண்டியன் திட்டிய விஷயத்தை எல்லாம் சொன்னவுடன் சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார்.

சீரியல் ட்ராக்:
காந்திமதி பழனிக்கு ஒரு மளிகை கடையை ஆரம்பித்துக் கொடுங்கள் என்று சொல்வதால் சுகன்யா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு பின் ராஜி -அரசி இருவருமே ரோட்டில் வந்து கொண்டிருக்கும் போது குமார் மன்னிப்பு கேட்டார். ஆனால், அரசி கோபப்பட்டு திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா வந்திருந்தார். ராஜி, கோமதி எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் கோமதி, வீட்டில் தங்க சொன்னார். அந்த சமயம் பார்த்து செந்தில் போன் செய்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சமைத்து விடு என்றார். இதனால் மீனா, நான் இங்கேயே தங்கி விட்டு வரச் சொல்லி செந்தில் சம்மதம் சொல்லிவிட்டார் என்று பொய் சொன்னார். அரசி- ராஜி இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=neSYAttJgUY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் கோமதி, ராஜி எல்லோருமே வீட்டில் தங்க செல்வதால் மீனாவை ஒத்துக்கொள்கிறார். அப்போது போன் செய்த செந்தில், சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சமைக்க சொல்கிறார். ஆனால், வீட்டிலேயே மீனா தங்கி ராஜி உடன் ஜாலியாக பேசுகிறார். பின் வீட்டில் மீனா இல்லாததால் செந்தில் ஃபோன் செய்கிறார். ஆனால் மீனா எடுக்கவே இல்லை. பின் செந்தில் வீட்டுக்கே வந்து விடுகிறார். அப்போது செந்தில், நான் இங்கே தங்க சொல்லவே இல்லை என்கிறார். கோமதி கோபப்படுகிறார்.






