விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் கதிர், எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார்.
கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டத்தால் பாண்டியன் ஒத்து கொள்கிறார். ஆனால், கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்க, இருவரும் சண்டை போட்டு இருந்தார்கள். இதற்கிடையில் ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போகிறார். இறுதியில் பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக லீவு கேட்க சொல்ல எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் கோவப்பட்டு இருந்தார். ஆனால், ரூமில் ஒவ்வொரு ஜோடியும் ஹனிமூன் பற்றி பேசி மீனா- ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்தி இருந்தார். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்கிறார். அப்போது, 5000 தான் ஆகும் என்று ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். ஆனால் , சரவணன் உண்மையிலேயே ரூம் உடைய செலவு 5000 தானா? இதற்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாது என்று சொல்லி தூங்கி விட்டார். அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 15000 கட்ட வேண்டும் என்று தங்க மயிலுக்கு மெசேஜ் வந்தது.
சீரியல் கதை:
இதைப் பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, அவர் சென்னைக்கு போன பிறகு சொல்லு என்கிறார். இருந்தாலும், தங்கமயில் மாட்டிக் கொள்வோம் என்று பயப்படுகிறார். மேலும், பாண்டியன் வீட்டில் செய்தித்தாள் பற்றி பேசி இருந்தார். அதற்கு மீனா, இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் போட சொல்லி கேட்டார். உடனே பாண்டியன், இது ஒரு தண்ட செலவா? என்று மனது கஷ்டப்படும் அளவிற்கு பேசி இருந்தார். இதனால் மீனா வருத்தப்பட்டதை பார்த்து செந்தில் தன் அப்பாவிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் செந்தில், மீனாவை குறித்து அவர் அப்பா, அம்மாவை பார்த்து சண்டை போட்டார். அதற்கு அவர்களும் கோபமாக பேசி இருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், மீனா அப்பாவிடம் செந்தில் அரசாங்க வேலைக்கு போவேன் என்று சவால் விடுகிறார். இதை கதிர் போனில் ரெக்கார்டு செய்து மீனாவிடம் காண்பிக்கிறார். அதை பார்த்தவுடன் ஆனந்தத்தில் மீனா அழுகிறார். பின் தங்கமயில் ஹனிமூன் செல்வதற்கான பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வருகிறார். அதைப் பார்த்து எல்லோருமே அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
காரணம், ஒரு பெரிய சூட்கேசில் துணிகளை எடுத்துக் கொண்டு தங்கமயில் வருகிறார். அந்த சமயம் அங்கு வந்த தங்கமயில் அம்மா, அவரை உள்ளே அழைத்து சென்று தேவையான துணிகளை மட்டும் எடுத்து கொடுக்கிறார். அதன் பின் பாண்டியன் செலவுக்கு காசு கொடுக்கிறார். எல்லோருமே ₹1000 தான் தருவார் என்று கிண்டலாக நினைக்கிறார்கள். ஆனால், பாண்டியன் எதிர்பாராத விதமாக நிறைய பணத்தை கொடுக்க எல்லோருக்குமே அதிர்ச்சியில் நிற்கிறார்கள. இத்துடன் சீரியல் முடிகிறது.