விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயிலை அவருடைய தங்கை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தார்.
பாக்கியம், மாமியார் வீட்டில் வாழத்துப்பில்லை. இங்க மூணு பேருக்கு சமைக்கவே வழியில்லை. இதில் இன்னொரு ஆளுக்கு சேர்த்து சமைக்கணுமா? ஒழுங்கு மரியாதையாக உன் மாமியார் வீட்டிற்கு போகும்
வழியை பார் என்று மோசமாக பேசி விட்டார். இதனால் தங்கமயில் மனமுடைந்து சாப்பிடாமல் அங்கிருந்து சென்று விட்டார். பின் தன் கணவருக்கு வாய்ஸ் மெசேஜ் பேசி அனுப்பினார்.

கதிர்-ராஜி இருவரும் பீச்சில் சந்தோசமாக விளையாடிவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒரு குரூப் பாட்டு பாடி டொனேஷன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், ராஜிக்காக ஒரு பாடலை பாடியிருந்தார். அதைப் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இன்னொரு பக்கம் சரவணன், அஞ்சலிக்கு போன் செய்து விசாரித்தார். சரவணன் ஜாலியாக கடலை போட்டுக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தார். பாண்டியன், எதற்காக கோயிலுக்கு போனாய் என்று கேட்டார். சரவணன், அம்மாவின் மீது இருக்கும் கோபம் குறைய வேண்டும் என்று போனேன் என்றார். பின் பாண்டியன், சரவணனை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் ரூமில் ராஜி, கதிருக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ரூமிற்கு வந்த கதிர், ராஜிக்காக மல்லிகைப்பூ வாங்கி வந்து தலையில் வைத்து விட்டார். இதெல்லாம் பார்த்து ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அஞ்சலி, சரவணனுக்கு மெசேஜ் போடுகிறார். உடனே சரவணன், அஞ்சலிக்கு போன் செய்து விசாரிக்கிறார். அப்போது அஞ்சலி, தனக்கு திருமணமாகி விவாகரத்தான விஷயத்தைப் பற்றி எல்லாம் சொல்லினார். இதைக் கேட்டு சரவணனுக்கு கஷ்டமாக இருக்கிறது. அஞ்சலி, சரவணன் வாழ்க்கையை பற்றி கேட்கிறார். சரவணன் எதுவும் சொல்லாமல் வேலை இருக்கிறது என்று போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் செந்தில் வீட்டிலேயே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக் :
மீனா கண்டித்துமே செந்தில் கேட்கவில்லை. அப்போது செந்தில், வீட்டில் யாருமே தங்கமயிலிடம் பேசாத போது நீ எதற்காக பேசினாய்? நகை விஷயத்தை எதற்காக மறைத்தாய்? கதிர் திருமணத்தை எதற்கு சொல்லவில்லை? என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் மீனாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் விவாகரத்து கேஸ் நடப்பதால் பாக்கியம் கோர்ட்டில் விவாகரத்து வேண்டாம் என்று உறுதியாக இரு. எப்படியாவது உன் மாமியார் வீட்டுக்குள் போ. மீண்டும் இந்த வீட்டிற்கு வராதே என்று தங்கமயிலை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






