விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், அரசி குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். மாரி- வடிவு எல்லோருமே பாண்டியன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார்கள். குமாரும் தான் செய்த தவறை உணர்ந்து பேசினார். இன்னொரு பக்கம் அரசி, கேஸ் வாபஸ் வாங்கியதைப் பற்றி பாண்டியன் வீட்டில் எல்லோருமே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த அப்பத்தா, அரசி-பாண்டியன் இடம் நன்றி சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்டில் அரசி மீது எந்த தவறும் இல்லை என்று கோர்ட்டில் சொன்னதால் சதிஷ் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். அதோடு மீண்டும் அரசியை திருமணம் செய்து கொள்வதைப் பற்றி தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். அவருமே எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சென்று விட்டார். இன்னொரு பக்கம் அப்பத்தா, குமார் இருவருமே நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, எனக்காகவும் உன்னுடைய அம்மாவிற்காகவும் தான் அரசி கேசை வாபஸ் வாங்கினால் என்ற உண்மையை சொல்லி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் சொத்தை விற்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமதி, குமார் கோர்ட்டில் அரசி காலில் விழுந்ததை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார் . பின் பாண்டியன் வீட்டிற்கு சதீஷும் அவருடைய அம்மாவும் வந்திருந்தார்கள். அப்போது சதிஷ் அம்மா, நடந்த அனைத்தையும் டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட விஷயத்தை சொன்னார். கோமதியும் நடந்த விஷயத்தை பற்றி சொன்னார். அப்போது சதீஷின் அம்மா, மீண்டும் சதீஸ்-அரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கேட்டார். பாண்டியன் ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் பாண்டியன், இனி எதுவாக இருந்தாலும் அரசி தான் முடிவு எடுக்கணும். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் நடப்பதை எல்லாம் சுகன்யா, குமார் வீட்டில் சொல்கிறார். அரசி திருமணம் விஷயத்தை தெரிந்து குமார் ரொம்பவே வருத்தப்படுகிறார். அதற்குப்பின் அரசி, நான் இன்னும் ஐந்து வருடத்திற்கு உங்கள் மகளாகவே இருக்க விரும்புகிறேன். நான் மேற்கொண்டு படிக்கணும். எனக்கு இப்ப திருமணத்தில் விருப்பமே இல்லை. நீங்கள் எந்த மாப்பிள்ளை சொன்னாலும் நான் கல்யாணம் செய்து கொள்ள தயார். என் மனதில் குமார் கிடையாது என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதை கேட்டு பாண்டியனமும் சம்மதிக்கிறார். பின் மாப்பிள்ளை வீட்டில் அரசிக்கு திருமணத்தில் விருப்பமில்லாத விஷயத்தை சொல்கிறார். சதீஷ் அம்மா எவ்வளவு எடுத்துச் சொல்கிறார்கள் சதீஸ் அம்மா எவ்வளவோ எடுத்து சொல்லியும் பாண்டியன் ஒத்துக்கொள்ளவில்லை. சதீஷும் அவருடைய அம்மாவும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். பின் அரசி தன்னுடைய அப்பாவிடம் நன்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் அரசி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத விஷயத்தைப் பற்றி சுகன்யா, குமார் வீட்டில் சொன்னவுடன் குமார் மனதுக்குள் சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






