விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் நண்பர் கோயிலுக்கு வந்தார். நண்பர், நீங்கள் இன்னும் காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு பழைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதை தங்கமயில் அப்பா பார்த்து ஷாக் ஆகி போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார். மறுபக்கம் குமார் ,தன்னுடைய பாட்டியின் மாத்திரைகளை எல்லாம் அரசி கொடுத்தார். அதோடு சாக்லேட்டையும் கொடுக்கிறார். கோபத்தில் அரசி திட்டுகிறார். இருந்தாலும் குமார் கொடுத்த சாக்லேட்டை தூக்கி போட முடியாமல் அரசி அமைதியாக வைத்துக் கொண்டார்.

மீனா, மயில் உடைய உடல்நலத்தை பற்றி அக்கரையாக விசாரித்துக் கொண்டிருந்தார். மயில் மீனா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ராஜி பயங்கர கடுப்பானார். பின் மீனாவை தனியாக சந்தித்து ராஜி கடுமையாக பேசி இருந்தா இருந்தார். மீனா, உண்மை தெரியாமல் எதுவும் பேசாதே என்று ராஜியை மயில் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றார். பின் மயில், மீனா, ராஜி மூவருமே பேசிக் கொண்டார்கள். அப்போது மீனா, மயிலின் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்தும், சரவணன் நடந்து கொண்டது விதத்தை அறிந்து ராஜி வருத்தப்பட்டார். பின் மீனா மீது தவறில்லை என்பதை ராஜி புரிந்து கொண்டார். அதற்குப்பின் ராஜி, கதிரிடம் எல்லா உண்மையும் சொல்ல நினைத்தார். ஆனால், மீனா வேணாம் என்று சொல்லியிருந்தார். அதற்குபின் பாண்டியன், 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட விஷயத்தை அறிந்த முத்துவேல், பணம் கொடுப்பதாக சொல்லி கதிர், ராஜிடம் பேசினார். கதிர், வேண்டாம் என்று சொல்லி வந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாணிக்கம், கோவிலில் சரவணன் அஞ்சலியுடன் பேசியிருந்த விஷயத்தை பாக்கியத்திடம் சொல்கிறார். பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு சென்று இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்கிறார். அப்போது வந்த தங்கமயில், என்ன முடிவு கட்டப் போகிறீர்கள்? என் வாழ்க்கை எனக்கு பார்க்க தெரியும். அவர் விவாகரத்து கொடுத்துவிட்டார். நானும் கொடுக்க போகிறேன். இனிமேல் இந்த பிரச்சினையை பெருசாக்காதீர்கள். என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இருந்தாலும் பாக்கியம் இதை விடுவதாக இல்லை.

சீரியல் ட்ராக்:
பாண்டியன் வீட்டில் பிரச்சனை செய்ய நினைக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், ஹோட்டலில் வாங்கிட்டு வந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். தன் மகனுக்குமே கொடுக்கிறார். இதை பார்த்து கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அரசி, குமார் கொடுத்த மாத்திரை சாக்லேட் இரண்டையும் காந்திமதி இடம் கொடுக்கிறார். காந்திமதி, குமார் உன்னை தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். உனக்காக தான் அவன் திருமணம் பண்ண மறுக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார். அரசி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.






