விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி - ராஜி இருவரும் முத்துவேலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, நான் என்னுடைய அப்பா வீட்டிற்கு போகட்டுமா? என்றார். கோமதி, மாமா ஏதாவது சொல்லுவார் என்றார். அப்போது வந்த பாண்டியனிடம் கோமதி, அனுமதி கேட்டார். பாண்டியனும் எதுவும் சொல்லாமல் ராஜியை அவருடைய அப்பா வீட்டிற்கு செல்ல அனுமதித்தார். ராஜியை பார்த்து முத்துவேல் சந்தோஷப்பட்டார். அப்போது வந்த சக்திவேல், எதற்காக இங்கு வந்தாய்? என்று ராஜியை கேட்டார்.

ராஜி, என் அப்பாவையே கொலை செய்ய நினைத்த கொலைகாரன் இந்த வீட்டில் இருக்கும் போது நான் வரக்கூடாதா? அவன் செய்யும் தவறுக்கு நீங்கள் துணையாக நிற்பதால் தான் அவன் இப்படி இருக்கிறான். ஒரு நாள் அவன் ஜெயிலுக்கு போகத்தான் போகிறான் என்றார். இதனால் கோபப்பட்ட குமார், சக்தி இருவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் சரவணன், கதிர், செந்தில் மூவருமே பேசிக் கொண்டு வந்தார்கள். அப்போது சரவணன், மீனாவிடம் பேசியதை சொல்லி வருத்தப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
செந்தில் அதெல்லாம் அவள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்று சமாதனம் செய்தார். அப்போது கதிர், உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லு அண்ணா நான் உனக்காக துணையாக இருப்பேன். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் பழனி, சுகன்யா கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய குழந்தை இடம் ரொம்ப ஜாலியாகவும் நாட்டு நடப்பை பற்றி எல்லாம் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்து காந்திமதி, முத்துவேல் இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சரவணன் பேசினாலும் அஞ்சலி பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது அந்த பக்கம் வந்த பாக்கியம், சரவணன்-அஞ்சலி இருவரும் பேசுவதை பார்த்து கொந்தளிக்கிறார். பின் பாக்கியம், இவளுக்காக தான் என் மகளை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தீர்களா? அவள் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தும் என் மகளை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனது இல்லை. உனக்கு வெட்கமாக இல்லையா? உனக்கு ஊரில் வேறு ஆண்பளை கிடைக்கவில்லையா? என்று அஞ்சலியும் சரவணனையும் ரொம்ப மோசமாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அவமானம் தாங்க முடியாமல் அஞ்சலி அங்கு இருந்து சென்று வருகிறார். இன்னொரு பக்கம் செந்தில் காலையில் எழுந்து மீனாவிற்கு உதவி செய்வதாக சொல்லிவிட்டு தூங்கி கொண்டு இருக்கிறார். மீனா வேலைக்கு நேரமாகிறது என்று சமைத்துவிட்டு கிளம்பி விடுகிறார். பின் செந்தில் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ரெடியாகுகிறார். அதற்குப்பின் பாண்டியன்- அரசி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்து கார்த்திகேயன் தன்னுடைய பொருள்களை எல்லாம் கடையில் வைக்க பார்க்கிறார். பாண்டியன், உனக்கு பொருள் வியாபாரமாக வேண்டும் என்றால் நீயே தனியாக கடைப்பிடி.

எதற்கு என் கடையில் வைக்கிறார் என்றெல்லாம் சொல்லி கார்த்திகேயனை அங்கிருந்து அனுப்பி விடுகிறார். பின் அரசி தனியாக நடந்து வந்திருப்பதை பார்த்து கார்த்திகேயன் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நான் வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறேன். அந்த கடையில் வாங்க வேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார். அரசி, தன்னுடைய கடை தான் என்று சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் எப்படியோ ஏதேதோ சொல்லி அரசி போன் நம்பரையும் கார்த்திகேயன் வாங்கிக் கொள்கிறார்.






