விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்தும், சரவணன் நடந்து கொண்டது விதத்தை அறிந்து ராஜி வருத்தப்பட்டார். பின் மீனா மீது தவறில்லை என்பதை ராஜி புரிந்து கொண்டார். அதற்குப்பின் ராஜி, கதிரிடம் எல்லா உண்மையும் சொல்ல நினைத்தார். ஆனால், மீனா வேணாம் என்று சொல்லியிருந்தார். அதற்குபின் பாண்டியன், 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட விஷயத்தை அறிந்த முத்துவேல், பணம் கொடுப்பதாக சொல்லி கதிர், ராஜிடம் பேசினார். கதிர், வேண்டாம் என்று சொல்லி வந்தார்.

மாணிக்கம், கோவிலில் சரவணன் அஞ்சலியுடன் பேசியிருந்த விஷயத்தை பாக்கியத்திடம் சொன்னார். பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு சென்று இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்றார். அப்போது வந்த தங்கமயில், என்ன முடிவு கட்டப் போகிறீர்கள்? என் வாழ்க்கை எனக்கு பார்க்க தெரியும். அவர் விவாகரத்து கொடுத்துவிட்டார். நானும் கொடுக்க போகிறேன். இனிமேல் இந்த பிரச்சினையை பெருசாக்காதீர்கள். என்னுடைய வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். இருந்தாலும் பாக்கியம் இதை விடுவதாக இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் வீட்டில் பிரச்சனை செய்ய நினைக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், ஹோட்டலில் வாங்கிட்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டார். தன் மகனுக்குமே கொடுத்தார். இதை பார்த்து கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டார். இன்னொரு பக்கம் அரசி, குமார் கொடுத்த மாத்திரை சாக்லேட் இரண்டையும் காந்திமதி இடம் கொடுத்தார். காந்திமதி, குமார் உன்னை தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். உனக்காக தான் அவன் திருமணம் பண்ண மறுக்கிறான் என்றார். அரசி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி ராஜி சொல்கிறார். கதிர், தன் தந்தையை விட்டுத் தராமல் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் இருவருமே கிரவுண்டில் பிராக்டிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். ராஜி கடுமையாக தன்னுடைய லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியம், மாணிக்கம் இருவருமே பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். பாக்கியத்தை பார்த்தவுடன் கோமதி பயங்கரமாக கொந்தளித்துக் கத்துகிறார். பின் இருவரும் சரவணன் பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
கோபத்தில் கோமதியும் திட்டுகிறார். அப்போது பாக்கியம், சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காண்பித்து இதற்காகத்தான் உங்கள் பையன் என் மகளை விவாகரத்து செய்கிறானோ. உங்கள் பையனை ஒழுங்காக வளர்க்கவில்லை. எங்களை குறை சொல்கிறீர்கள் என்றெல்லாம் மோசமாக பேசுகிறார்.பாண்டியன் பயங்கரமாக டென்ஷன் ஆகிறார். அப்போது வந்த சரவணன், பாக்கியம்- மாணிக்கத்திடம் சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு சென்ற விஷயத்தை அறிந்து தங்கமயில் வேகமாக வருகிறார்கள்.






