விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி-அரசி இருவரும் கூப்பிட்டும் அவர் திரும்பி பார்க்கவில்லை. பின் ராஜி, என்ன பிரச்சனை என்று விசாரித்தார். இப்போது தங்கமயில் எமோஷனலாக அழுது கொண்டு கர்ப்பமான விஷயத்தில் பொய் சொன்னேன் என்று மட்டும் சொன்னார். மற்ற எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. சரவணன் கஷ்டப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார் என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்டு கோமதிக்கு பயங்கர கடுப்பானது.

செந்தில் வழக்கம் போல் தாமதமாக எழுந்துவிட்டு சாப்பாடு ஆகிவிட்டதா? என்று கேட்டவுடன் வழக்கம்போல் மீனா ருத்ர தாண்டவம் ஆடினார். பின் செந்தில், மீனாவை சமாதானம் செய்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் தன் மீது பாசம் இல்லாமல் கோபத்தை காண்பிக்கிறார் என்றார். உடனே சரவணன், உண்மையை சொல்ல வரும்போது கோமதி, தங்கமயில் இடம் அன்பாக இரு என்று தன் மகனை தான் திட்டினார். இன்னொரு பக்கம் ஒரு பெண், வண்டி வாடகைக்கு வேண்டும். அதுவும் கதிர் தான் ஓட்ட வேண்டும் என்று சொல்வதால் ராஜிக்கு பயங்கர கடுப்பானது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் இதைப்பற்றி ராஜி, கதிரிடம் விசாரித்தார். அப்போது கதிர், அவருடைய தாத்தா வயதானவர். நான் வண்டி ஓட்டினால் தான் அவர் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார் என்றவுடன் ராஜி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சரவணன் கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த தங்கமயில், அவர் போனை எடுக்கவில்லை. என்னிடம் ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று ஒன்றுக்கு இரண்டாக மீண்டும் தங்கமயில் ஏற்றி வந்தார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், உண்மை தெரியாமல் சரவணனை திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் செய்த வேலையால் கொந்தளித்து வீட்டுக்கு வந்த சரவணன், எதற்காக இவ்வளவு நாடகம் ஆடுகிறாய். உன்னை பார்த்தாலே பிடிக்கவில்லை. ஒழுங்கு மரியாதையாக வீட்டில் எல்லா உண்மையும் சொல்லிவிடு. இவ்வளவு நாடகம் ஆடுவாயா? உன் கையில் பச்ச தண்ணி வாங்கி குடிப்பது கூட பாவம் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே அந்த பக்கம் வந்த கோமதி கதவை தட்டுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், வெளியே வந்து மீண்டும் என்னை திட்டுகிறார். வீட்டை விட்டு போக சொல்கிறார் என்று அழுது டிராமா பண்ணுகிறார்.

சீரியல் ட்ராக்:
சரவணன் உண்மையை சொல்ல பார்க்கிறார். ஆனால், கோமதி சொல்லவிடாமல் தடுத்து நிறுத்தி சரவணனை திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருக்கிறார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொல்கிறார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொல்கிறார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்று சொல்கிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.






