விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி நடனம் ஆடக்கூடாது என்று அந்த ஊர் இளைஞர்கள் பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கோமதியும் ராஜி நடனம் ஆட வேண்டாம் என்று சொன்னார். ஆனால், ராஜி எப்படியாவது கதிருக்கு பைக் வாங்க வேண்டும் என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி டான்ஸ் ஆடினார். இதை பார்த்து மொத்த ஊர் மக்களுமே அசந்து போய் விட்டார்கள். பின் கோமதி, இதோடு போதும் மீண்டும் நடனமெல்லாம் ஆட தேவையில்லை என்று திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் தங்களுடைய கட்டிடத்தை மீனா இடித்தது பற்றி சக்திவேல் தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி இருந்தார்.

உடனே முத்துவேல், மீனாவை வேலையை விட்டு தூக்கு என்று தன்னுடைய தம்பிக்கு ஐடியா கொடுத்தார்.
பின் அரசிக்கு மாப்பிள்ளை மெசேஜ் போட்டிருந்தார். அதை அரசி தன்னுடைய அண்ணிகளிடம் காண்பித்தார். அதில் மாப்பிள்ளை, எனக்கும் சின்ன வயதில் ஒரு கிரஷ் இருந்தது. இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவருமே நடன போட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகி இருக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டார். ஆனால், கோமதி நடனப் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று கோபப்பட்டார். என்ன செய்வது என்று புரியாமல் ராஜி -மீனா இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், மாப்பிள்ளை போட்ட மெசேஜை பற்றி மீனா- ராஜி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, அவர் ரொம்ப நல்லவர். தயவு செய்து அவரை ஏற்றுக்கொள் என்று அரசிக்கு அறிவுரை சொன்னார். அரசியும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். மறுநாள் காலையில் நடன போட்டிக்கான இரண்டாம் சுற்று நடைபெற்றது. ராஜி எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று மீனாவிடம் சொன்னார். அதற்கு மீனா, நீ அரசியை அழைத்துக் கொண்டு கிளம்பு. நான் அத்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்

கடந்த வாரம் எபிசோட்:
பின் கோமதி கோயிலுக்கு கிளம்பலாம் என்று மீனாவை கூப்பிட, மீனா ஏதேதோ சொல்லி சமாளித்தார். கடைசியில் ராஜி நடன போட்டிக்கு சென்ற விஷயம் கோமதிக்கு தெரிந்தது. அதை தடுத்து நிறுத்த கோவிலுக்கு கோமதி வந்தார். ஆனால், ராஜி அதை கண்டுகொள்ளாமல் மேடையில் ஏறி நடனமாடி இருந்தார். ராஜி நடனத்தை பார்த்து ஊரில் உள்ள எல்லோருமே கைத்தட்டி கொண்டாடி இருந்தார்கள். கோமதியும் மனது மாறி ராஜியை பாராட்டி இருந்தார். இன்னொரு பக்கம் குமார், அரசி இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோயில் திருவிழாவில் ராஜி நடனம் ஆடியதற்கு எல்லோருமே அவரிடம் செல்ஃபி இருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்த சில இளைஞர்கள் ராஜியை கிண்டல் அடிக்கும் வகையில் பேசுகிறார்கள். இதனால் கொந்தளித்த மீனா அவர்களிடம் சண்டைக்கு போகிறார். ஓரு வழியாக கோமதி அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்து விடுகிறார். பின் ராஜி, கதிருக்கு போன் செய்து நடன போட்டியில் கலந்து இருப்பதை சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை சதீஷ், அரசிக்கு போன் செய்கிறார். அரசியும் சதீஷ் இடம் பேச உள்ளே போகிறார். அரசி ரூமில் யாருக்கும் தெரியாமல் குமார் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
குமாரை பார்த்தவுடன் அரசி ஷாக் ஆனார். பின் குமார், நீ எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாய். நான் விடமாட்டேன். நீ என்னை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசியை கட்டாயப்படுத்துகிறார். பின் அரசி, ரூமுக்குள் கோமதி வருகிறார். அப்போது அரசியை குமார் வாயை பொத்தி மிரட்டி இருப்பது தெரிகிறது. உடனே மீனா, ராஜி இருவருமே வந்து விடுகிறார்கள். இருந்தாலுமே அரசியை குமாரிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் கோபம் தாங்க முடியாமல் மீனா ஒரு இரும்பு பாத்திரத்தால் குமாரின் தலையில் அடிக்க, அவர் கீழே விழுந்து விடுகிறார். குமார் பேச்சு, மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






