விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா வந்ததால் கைத்தறி மொத்த பணத்தையும் செந்தில் கீழே கொட்டி விட்டார். பயத்தில் செந்தில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். மொத்த பணத்தையும் எடுத்த மீனா, யார் கொடுத்தது? எங்கு எப்படி இந்த பணம் வந்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். செந்தில், பதில் சொல்லவே முடியவில்லை. மீனாவும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் செந்தில் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மீனா விடமிருந்து தப்பித்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன் கஷ்டப்பட்டு துணி துவைத்து கொண்டிருந்தார். கோமதி வேண்டாம் என்று சொல்லியும் பாண்டியன் கேட்கவில்லை.

மீனா, இந்த பணத்தை மாமாவிடம் கொடுக்கலாம் சீக்கிரம் கிளம்புங்கள் என்றார். செந்தில் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். ஆனால், மீனா கேட்கவில்லை. செந்தில்-மீனா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். பின் பாண்டியன் கேட்டபடி 10 லட்சம் ரூபாய் பணத்தை செந்தில் எடுத்துக் கொடுத்தார். பாண்டியனும் எதுவும் சொல்லாமல் வாங்க வந்தார். கோமதி தடுக்கிறார். இருந்தாலும் பாண்டியன் கேட்கவில்லை, பணத்தை வாங்கிக் கொண்டார். உடனே கதிர், சீக்கிரத்திலேயே நான் பணம் கொடுக்கிறேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
செந்திலுக்கு பணம் போனதை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பின் கடையில் சரவணன், வேலை செய்து கொண்டிருக்கும்போது அஞ்சலி போன் செய்கிறார். அதை கவனித்த பாண்டியன், நான் உன் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்திருந்தால் நீ அஞ்சலியை கல்யாணம் செய்துகொண்டு இருந்திருப்பாய். இப்பவும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நல்லபடியாக விவாகரத்து முடியட்டும். உனக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன். இருந்தாலும் எதற்கும் அவசரப்படாதே அமைதியாக இரு. அந்தப் பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசாதே என்றார். சரவணன் சரி என்றார். இன்னொரு பக்கம் காந்திமதி, அரசி-குமாரை சந்தித்து பேச வைக்க முயற்சி செய்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது கால் தடுமாறி கோமதி கீழே விழுந்து விடுகிறார். விழுந்ததில் கோமதி, நெஞ்சை பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியாமல் கத்துகிறார். ஆனால், பாண்டியன் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் கோமதி நாடகம் ஆடுகிறார் என்று கிளம்பி விடுகிறார். பின் கோமதி மயங்கி விடுகிறார். அந்த சமயம் வந்த சரவணன் தன்னுடைய அம்மாவின் நிலையை கண்டு ரொம்பவே பதறுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் உதவிக்கு சரவணன், பழனி-சுகன்யா இருவரையும் அழைத்து வருகிறார். எல்லோருமே பதறிப் போய் கோமதியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போகிறார்கள். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பாண்டியனிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறார். பாண்டியனுமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் போகிறார். அங்கு கோமதி சீரியசான நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனா- கதிர் எல்லோருமே பாண்டியனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பாண்டியன் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறார்.






