விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதியும் சூப்பராக ஒரு லெட்டரை எழுதி முடித்து விட்டார். அதை தன் கணவரிடம் கொடுப்பதற்காக கிளம்பி இருந்தார். அப்போது வெளியில் தன் அண்ணன்களை பார்த்த கோமதி, உங்களுடன் நான் ஒன்றாக சேரனும் நினைத்தது என் தவறுதான். உங்களால் தான் என் கணவர் என்னிடம் பேசவில்லை. உங்கள் உறவே தேவையில்லை என்று சண்டை போட்டு விட்டு சென்றார். முத்துவேல் பெரிதாக எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அதற்குப்பின் கோமதி, பாண்டியனை சந்திக்க கடைக்கு சென்றார். கோமதி, தான் எழுதிய லெட்டரை பாண்டியனிடம் கொடுத்தார். பாண்டியர், ஒரு கஸ்டமர் பொருள் கேட்பதால் கோமதி கொடுத்த லெட்டரில் அந்த பொருளை மடித்துக் கொடுத்து அனுப்பி விட்டார். பின் இதை பற்றி கோமதி, மீனாவிடம் சொன்னார். பின் கோமதி-மீனா, அந்த லெட்டர் முக்கியம் என்று அந்த பொருள் வாங்கிய பெண்ணின் பின்னாடியே சென்று சண்டை போட்டு கடிதத்தை வாங்கி விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீண்டும் கோமதி அந்த கடிதத்தை கொடுத்தார். ஆனால், கோபத்தில் பாண்டியன் அதை கசக்கி தூக்கி போட்டு விட்டார். இதனால் மனமடைந்த கோமதி வேதனையில் வீட்டிற்கு சென்றார். கோமதி சென்ற பின் பாண்டியன் அந்த கடிதத்தை எடுத்து படித்து பத்திரமாக வைத்து கொண்டார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் ஜாலியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் விளையாடி முடித்து விட்டு கிளம்புகிறார்கள். ராஜி, பீச்சில் எடுத்த போட்டோக்களை எல்லாம் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார். அதை பார்த்த மீனா-அரசி இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் ராஜி தான் என்று கோமதி கோபப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் ராஜிக்கு போன் செய்து ரொம்ப கடுமையாக கோமதி நடந்து கொள்கிறார். இதனால் ராஜி ரொம்பவே கஷ்டப்படுகிறார். அதற்குப்பின் மீனா கோமதிக்கு அறிவுரை சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மனம் மாறிய கோமதி மீண்டும் ராஜிக்கு போன் செய்து அன்பாக பேசுகிறார். அதற்குப்பின்
கதிர்-ராஜி இருவரும் சாப்பிட ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்கள். தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்த கதிர், அம்மாவிடம் பேசுங்கள் என்கிறார். கோபத்தில் பாண்டியன், கதிரை திட்டி விட்டு ஃபோனை வைத்து விடுகிறார். பின் கதிர்-ராஜி இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜி, உண்மையில் இந்த கல்யாணத்தில் நீங்கள் கஷ்டப்படவில்லை தானே என்று கேட்கிறார். அதற்கு கதிர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






