விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர்- செந்தில் இருவரும் தங்களுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி விட்டு வந்தார்கள். ஆனால், கோமதி இல்லை. பின் வீட்டிற்கு வந்த செந்தில், கதிர் இருவரும் பாண்டியனை பார்த்து, உங்களால்தான் அம்மா வீட்டை விட்டு போய்விட்டார். இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது என்று தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். சரவணன் தடுத்துமே கேட்கவில்லை. செந்தில்- கதிர் இருவரும் தங்கள் மனதில் இருந்த ஆங்கத்தை எல்லாம் கொட்டி தீர்க்கிறார்கள். பாண்டியன் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.

கோவிலில் இருந்து மீனா, கோமதி இருவரும் வந்து விட்டார்கள். அப்போது மீனாவிற்கு ஃபோன் செய்த செந்தில், எங்கிருக்கிறாய்? எவ்வளவு பெரிய பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. அம்மாவை காணவில்லை என்றெல்லாம் சொன்னார். மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் மீனா- கோமதி இருவரும் வீட்டிற்கு கிளம்பி வந்தார்கள். கோமதியை பார்த்தவுடன் எல்லோருமே எமோஷனலாக அழுதார்கள். கோமதிக்கு ஒன்றும் புரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது பாண்டியன், எதற்கு இந்த ட்ராமா? என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். கோமதி, நான் என்ன டிராமா செய்தேன்? நான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். உங்களிடம் சொல்லிவிட்டு போனால் மட்டும் அன்பாக பேசுவீர்களா? நான் என்ன தவறு செய்து விட்டேன். என் அண்ணன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற ஒரு பொய் சொல்லி கல்யாணம் செய்தேன் என்று கொந்தளித்தார். பாண்டியனுமே பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோமதி, எல்லாமே உங்கள் பேச்சை கேட்டு தான் நடக்கணுமா? எனக்காக நான் ஒரு முடிவெடுக்க கூடாதா? என்று முதல் முறையாக பாண்டியனை எதிர்த்து பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, இந்த வீட்டில் எல்லா விஷயத்தில் நீங்களே முடிவு எடுத்திருக்கிறீர்கள். எதையாவது என்னிடம் கேட்டிருக்கிறீர்களா? சரவணன், அரசி கல்யாணம் என்று எல்லா முடிவையும் நீங்கள்தான் எடுத்தீர்கள். நீங்கள் என்னிடம் கேட்கவில்லை என்று நான் கோபப்பட்டேனா? இனிமேல் என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்றெல்லாம் கொந்தளிக்கிறார். சரவணன் தன் அம்மாவை சமாதானம் செய்ய வருகிறார். இருந்தாலும் கோமதி, சரவணனை திட்டி விடுகிறார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ராஜி- மீனா எல்லோருமே கோமதியை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது காந்திமதி, இருவரையும் சேர்த்து வைக்க தான் இந்த திட்டம் போட்டேன். ஆனால் அது சொதப்பிவிட்டது என்று உண்மையை சொல்கிறார். காந்திமதியின் பிளானை கேட்டு ராஜி- மீனா ஷாக் ஆகிறார்கள். கோமதி எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், செந்தில்- கதிர் இருவரும் பேசியதை நினைத்து சரவணன் இடம் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த பழனி, வீட்டிற்கு பாண்டியனை அழைக்கிறார். பாண்டியன், இனிமேல் நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன். எல்லோருமே அவரவர்கள் விருப்பப்படி இருக்கட்டும் என்றெல்லாம் சொல்கிறார்.






