விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், ஒரு சின்ன பிரச்சனை தான் சீக்கிரமாகவே குணம் ஆகி விடுவார் என்று சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் செந்தில், மீனாவிற்காக தங்க வளையல் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். மீனா, எப்படி வாங்கினாய் பணம் இந்த பணம் எப்படி வந்தது? லஞ்சம் வாங்கினாயா? என்று கேட்டார். அதைக் கேட்டு செந்தில், உண்மை தெரிந்து விட்டதோ என்று ஷாக் ஆனார். மீனா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததால் செந்தில் சீட்டு பணம் போட்டு இருந்தேன். அதில் தான் விழுந்தது என்று பொய் சொல்லி விட்டார்.

அதற்குப்பின் பாண்டியன், ராஜியிடம் எக்ஸாம் பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். பாண்டியன், கோமதியும் ராஜியையும் முத்துவேலை பார்ப்பதற்காக அனுப்பி வைத்தார். கோமதி, ராஜி இருவருமே முத்துவேல் வீட்டிற்கு சென்றார்கள். காந்திமதி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் முத்துவேலிடம் கோமதி, ராஜி இருவரும் நலம் விசாரித்தார்கள். முத்துவேலுமே கோபப்படாமல் அக்கரையாக பேசி இருந்தார். கதிர் செய்த உதவியை பற்றி ரொம்ப பெருமையாகவும் பேசி இருந்தார். அதற்குப்பின் ராஜி தன்னுடைய அப்பாவை வாக்கிங் அழைத்து சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதையெல்லாம் பார்த்து குமாருக்கு கோபம் தான் வருகிறது. அப்போது பாண்டியன் அந்த இடத்திற்கு வந்து விட்டார். ராஜி, ஏதோ ஒரு வேலையாக உள்ளே சென்று விட்டார். அப்போது பாண்டியன், உங்களுக்கு இருக்கும் பிரச்சனை எனக்கு தெரியும். எதுவாக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், பயப்படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றெல்லாம் சொன்னார். முத்துவேலுமே, பாண்டியன் இடம் விரோதம் காட்டாமல் நல்லபடியாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார், கோமதி- ராஜி வீட்டிற்கு வந்த விஷயத்தையும், பாண்டியன்- முத்துவேல் இருவரும் பேசிக் கொண்ட விஷயத்தையும் சொல்கிறார். இதைக் கேட்டு சக்திவேல் பயங்கரமாக கொந்தளிக்கிறார். சீக்கிரத்திலேயே ஏதாவது செய்து இரண்டு குடும்பத்தையும் பிரிக்க வேண்டும் என்று குமார்- சக்திவேல் இருவரும் திட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வாங்கிக்க சொல்லி நபர் ஒருவர் கேட்கிறார். பாண்டியன், அதெல்லாம் தேவையில்லை என்று அந்த நபரை அனுப்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாண்டியன், சரவணன் தன்னுடைய குழந்தையை பற்றி கூட கவலை இல்லாமல் இருக்கிறான்.
அது நம்ம வீட்டு வாரிசு. நீ தங்கமயிலின் வீட்டிற்கு சென்று கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு வா என்று சொல்கிறார். கோமதியும் தங்கமயில் வீட்டிற்கு போகிறார். ஆனால், தங்கமயில் அங்கு இல்லை. பாக்கியம் தான் இருக்கிறார். வழக்கம்போல பாக்கியம், பாண்டியன் குடும்பத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். கோமதி பெரிதாக கண்டுகொள்ளாமல் பணத்தை டேபிள் மீது வைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார். கோமதி ஆட்டோவில் ஏறி செல்வதை தங்கமயில் பார்த்து விடுகிறார்.






