விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதியின் போனை பார்த்து காந்திமதி, பாண்டியன்- கோமதி இருவரையும் சேர்த்து வைக்க திட்டம் போட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் காந்திமதி, கோமதி எங்கே என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது என்று நாடகம் ஆடினார். ராஜி, அரசி, கதிர் எல்லோருமே தன் அம்மாவிற்கு போன் செய்தார்கள். ஆனால், கோமதி போன் சைலண்டில் போட்டு காந்திமதி மறைத்து வைத்து விட்டார். இன்னொரு பக்கம் மீனாவுடன் சேர்ந்து கோமதி கோயிலுக்கு சென்று இருந்தார்.

காந்திமதி, கோமதி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எங்கே போனால் என்று தெரியவில்லை. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்று அழுது டிராமா போட்டுக் கொண்டிருந்தார். கோமதி காணாமல் போன விஷயத்தைப் பற்றி அரசி- கதிர் இருவரும் செந்தில், சரவணனுக்கு சொன்னார்கள். பின் பாண்டியனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். காந்திமதி அழுது டிராமா செய்து கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கதிர்- செந்தில் இருவரும் தங்களுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தேடி விட்டு வந்தார்கள். ஆனால், கோமதி இல்லை. பின் வீட்டிற்கு வந்த செந்தில், கதிர் இருவரும் பாண்டியனை பார்த்து, உங்களால்தான் அம்மா வீட்டை விட்டு போய்விட்டார். இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது என்று தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். சரவணன் தடுத்துமே கேட்கவில்லை. செந்தில்- கதிர் இருவரும் தங்கள் மனதில் இருந்த ஆங்கத்தை எல்லாம் கொட்டி தீர்க்கிறார்கள். பாண்டியன் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோவிலில் இருந்து மீனா, கோமதி இருவரும் வந்து விடுகிறார்கள். அப்போது மீனாவிற்கு ஃபோன் செய்த செந்தில், எங்கிருக்கிறாய்? எவ்வளவு பெரிய பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. அம்மாவை காணவில்லை என்றெல்லாம் சொல்கிறார். மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் மீனா- கோமதி இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகிறார்கள். கோமதியை பார்த்தவுடன் எல்லோருமே எமோஷனலாக அழுகிறார்கள். கோமதிக்கு ஒன்றும் புரியவில்லை.

சீரியல் ட்ராக்:
அப்போது பாண்டியன், எதற்கு இந்த ட்ராமா? என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார். கோமதி, நான் என்ன டிராமா செய்தேன்? நான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். உங்களிடம் சொல்லிவிட்டு போனால் மட்டும் அன்பாக பேசுவீர்களா? நான் என்ன தவறு செய்து விட்டேன். என் அண்ணன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற ஒரு பொய் சொல்லி கல்யாணம் செய்தேன் என்று கொந்தளிக்கிறார். பாண்டியனுமே பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோமதி, எல்லாமே உங்கள் பேச்சை கேட்டு தான் நடக்கணுமா? எனக்காக நான் ஒரு முடிவெடுக்க கூடாதா? என்று முதல் முறையாக பாண்டியனை எதிர்த்து பேசுகிறார்.






