விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோயிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு போட்டிகள் நடந்தது. பாண்டியன் குடும்பமே வெற்றி பெற்று கிரைண்டரை தூக்கி விட்டார்கள். பாண்டியன், பழனிக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தேன். பெண் வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னவுடன் பழனிமுகம் மாறி இருந்தது. உடனே பழனி, கல்யாணம் வேண்டாம் என்று சொன்னார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே அவரை சம்மதிக்க வைத்தார்கள். பின் ராஜி, கோயிலில் கதிருடன் எடுத்த புகைப்படத்தை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டார்.

அப்போது வந்த கதிர், நீ பரிட்சையில் கவனம் செலுத்து. எப்படியாவது நீ போலீஸ் ஆக வேண்டும் என்று அவருக்கு உத்வேகம் கொடுத்தார். நேற்று எபிசோட்டில் தங்கமயில், பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தலைமை ஆசிரியர், இன்னும் டூப்ளிகேட் சர்டிபிகேட் தரவில்லையா? ஏன் இப்படி செய்கிறீர்கள்? சீக்கிரம் கொடுங்கள் என்று சொல்ல, தங்க மயில் ரொம்பவே பயந்தார். இன்னொரு பக்கம் பழனிக்கு பெண் பார்க்க பாண்டியன் வீட்டில் சென்றிருந்தார்கள். அப்போது பாண்டியன், தன்னுடைய குடும்பத்தையும் பழனியையும் பற்றி பெண் வீட்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அது மட்டும் இல்லாமல் பழனியின் அண்ணன்களால் வரும் பிரச்சனையும் முன்கூட்டியே சொல்வதால் அவர்கள் எல்லாத்திற்கும் சம்மதம் சொன்னார்கள். பின் இரண்டு வீட்டிலுமே திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். பின் பாண்டியன்- கோமதி இருவருமே பெண் வீட்டில் நடந்ததை அப்பத்தாவிடம் சொல்ல, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். நேற்று எபிசோட்டில் ராஜி, போலீஸ் தேர்வு எழுதினால் என்ன பிரச்சனை வருமோ? என்று மீண்டும் பயந்து கொண்டிருந்தார். உடனே கதிர் அவருக்கு அறிவுரை சொல்லி சப்போர்ட்டாக இருந்தார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தங்கமயில், பள்ளியில் சர்டிபிகேட் கொடுக்க சொன்னதை பற்றி சரவணன் இடம் பேசி இருந்தார். ஆனால், சரவணன் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. பின் ராஜி-கதிர் இருவருமே கிரவுண்டில் ஓடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டில் இதை பற்றி பாண்டியன் சொல்ல, கதிர்-ராஜி வந்தார்கள். அப்போது பாண்டியன், ராஜி போலீஸ் வேலைக்கு போகக்கூடாது என்று சண்டை போட்டார். அதற்கு கதிர், எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள். இதற்கும் ராஜிக்கும் சம்பந்தமில்லை. அவள் விருப்பப்படி போலீஸ் ஆகுவார். அதற்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்று பாண்டியனை எதிர்த்து பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், நண்பனின் திருமணத்திற்கு சென்னை போவதாக வீட்டில் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் பாண்டியன் சண்டை போடுகிறார். கதிர், ராஜியின் தேர்வுக்காக தான் சென்னை செல்கிறார்கள். அதை மறைத்து தான் இவர்கள் சொல்கிறார்கள். பாண்டியன்-கதிர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் அதிகமானது. இன்னொரு பக்கம் சரவணன், கதிர் பேசியது ரொம்பவே தவறு என்று பேச, தங்கமயில் கதிருக்கு சப்போர்ட் செய்து பேசியிருந்தார். பின் இதையெல்லாம் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து புலம்புகிறார். பின் கடையில் பாண்டியன், கதிர் சொன்னதை பற்றி புலம்பி கொண்டிருக்கிறார். இதனால் செந்திலுக்கு கோபம் தான் வந்தது.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு ராஜியின் சித்தப்பா வருகிறார். அவர் தனக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் பிரச்சனையை முடிக்க பார்க்கிறார். மீனா, எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்வேன். உங்கள் அந்தஸ்தை வைத்து நீங்கள் அந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள். என்னால் யாருக்கும் சலுகை செய்ய முடியாது என்று அதிகாரியை திட்டி விட்டு செல்கிறார். இதனால் ராஜியின் சித்தப்பா பயங்கரமாக மீனாவின் மீது கோபப்படுகிறார். கடைசியில் கதிர்- ராஜி இருவருமே சென்னைக்கு கிளம்புகிறார்கள். கோமதி, அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லி என்றார். ஆனால், கதிர் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






