விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி அந்த கடிதத்தை கொடுத்தார். ஆனால், கோபத்தில் பாண்டியன் அதை கசக்கி தூக்கி போட்டு விட்டார். இதனால் மனமடைந்த கோமதி வேதனையில் வீட்டிற்கு சென்றார். கோமதி சென்ற பின் பாண்டியன் அந்த கடிதத்தை எடுத்து படித்து பத்திரமாக வைத்து கொண்டார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் பீச்சில் ஜாலியாக சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

கதிர்- ராஜி இருவரும் பீச்சில் விளையாடி முடித்து விட்டு கிளம்பினார்கள். ராஜி, பீச்சில் எடுத்த போட்டோக்களை எல்லாம் குடும்பத்திற்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்த மீனா-அரசி இருவரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் ராஜி தான் என்று கோமதி கோபப்பட்டார். அதுமட்டுமில்லாமல் ராஜிக்கு போன் செய்து ரொம்ப கடுமையாக கோமதி நடந்து கொண்டார். இதனால் ராஜி ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் மீனா கோமதிக்கு அறிவுரை சொன்னார். மனம் மாறிய கோமதி மீண்டும் ராஜிக்கு போன் செய்து அன்பாக பேசி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் கதிர்-ராஜி இருவரும் சாப்பிட ஹோட்டலுக்கு சென்று இருந்தார்கள். தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்த கதிர், அம்மாவிடம் பேசுங்கள் என்றார். கோபத்தில் பாண்டியன், கதிரை திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார். பின் கதிர்-ராஜி இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜி, உண்மையில் இந்த கல்யாணத்தில் நீங்கள் கஷ்டப்படவில்லை தானே என்று கேட்டார். அதற்கு கதிர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி- கதிர் இருவரும் வெளியே சந்தோஷமாக ஊர் சுற்றிவிட்டு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். இருவரும் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக விடுகிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்த செந்தில், மீனா பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது கோமதி, மீனா ரொம்ப பாவம். அவளுக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. அவளை புரிந்து கொள் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட செந்திலும் மனம் மாறுகிறது.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு சென்ற செந்தில், கோமதி சொன்ன விஷயத்தை பற்றி பேசுகிறார். மீனா, காதலித்து கல்யாணம் செய்து தன் தந்தையை ஏமாற்றியதைப் பற்றி சொல்ல, செந்தில் வருத்தப்பட்டு பேசுகிறார். உடனே மீனா, நம்முடைய கல்யாண விஷயத்தில் என் அப்பா வருத்தப்பட்டு இருக்க மாட்டாரா? நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னவுடன் செந்திலால் எதுவும் பேச முடியவில்லை, அமைதியாகி விடுகிறார்.






