விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மலர், குடும்பத்தில் எல்லோருமே பொங்கல் வைப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார்கள். அங்கு மலரின் அம்மாவை பார்த்தவுடன் யாருமே கண்டு கொள்ளவில்லை. கோமதி மட்டும் அன்பு அக்கறையோடு விசாரித்தார். தங்கராஜ் வந்தவுடன் மலர் குடும்பத்தில் எல்லோருமே விழுந்து விழுந்து கவனித்தார்கள். இதை பார்த்து கோமதிக்கு கடுப்பாகிறது. பின் எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் வைத்துவிட்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் முத்துவேலை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் கிளம்பி விட்டார்கள்.

முத்துவேல் போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் சக்திவேல் பதறினார். பின் கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக போன விஷயத்தை தன்னுடைய வீட்டில் சொல்லி சண்டை போட்டார் சக்திவேல். ஒரு கட்டத்தில் சக்திவேல், பாண்டியன் இடம் தன் அண்ணனை கேட்டு
கொந்தளித்தார். கதிருக்கு போன் செய்து பாண்டியன் விசாரித்தார். அப்போது கதிர், தன்னுடன் தான் முத்துவேல் இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் சக்திவேல்- பாண்டியன் இடையே சண்டை வருகிறது. பின் மாரி, சக்திவேலை அங்கிருந்து அழைத்து சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
முத்துவேலுக்கு இருக்கும் பிரச்சனையை பாண்டியன் தெரிந்து கொண்டு வெளியில் சொல்லாமல் கதிருக்கு சப்போர்ட் செய்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கதிரிடம், முத்துவேலுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், கதிர் உண்மையை சொல்லவில்லை. பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம். எல்லோரும் அவரவர்கள் வேலையை செய் என்று திட்டி அனுப்பி விட்டார். இருந்தாலும் ராஜிக்கு தன் தந்தையை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பின் கதிரை தனியாக அழைத்து சென்றார் பாண்டியன்.

சீரியல் ட்ராக்:
பின் கதிரிடம் பாண்டியன் நடந்ததை விசாரித்தார். முத்துவேலிற்கு கேன்சர் இருக்கும் பிரச்சினை பற்றி எல்லா விவரத்தையும் கதிர் சொன்னார். அதைக் கேட்டு பாண்டியனுக்கு கஷ்டமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவர் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கதிருக்கு சப்போர்ட் செய்தார். அதோடு கதிர் தன் குடும்பத்திற்காக செய்த எல்லாவற்றையுமே நினைத்து பாண்டியன் ரொம்பவே பெருமைப்பட்டார். இன்னொரு பக்கம் முத்துவேல், தன் பிரச்சினை பற்றி சொல்லாமல் பொய் சொல்லி விட்டார். வீட்டில் உள்ளே எல்லாமே நம்பி விட்டார்கள். அதற்குப்பின் முத்துவேல் தன்னுடைய மனைவியிடம் கதிரை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் ராஜி, அப்பாவிற்கு என்ன ஆனது? உண்மையை சொல் என்று கேட்கிறார். கதிர், அதெல்லாம் ஒன்றுமில்லை. சின்ன பிரச்சனை தான். சீக்கிரமாகவே குணம் ஆகி விடுவார் என்று சொல்லி சமாதானம் செய்கிறார். அதற்குப்பின் செந்தில், மீனாவிற்காக தங்க வளையல் வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். மீனா, எப்படி வாங்கினாய் பணம் இந்த பணம் எப்படி வந்தது? லஞ்சம் வாங்கினாயா? என்று கேட்டார். அதைக் கேட்டு செந்தில், உண்மை தெரிந்து விட்டதோ என்று ஷாக் ஆகிறார். மீனா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததால் செந்தில் சீட்டு பணம் போட்டு இருந்தேன். அதில் தான் விழுந்தது என்று பொய் சொல்லி விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன், ராஜியிடம் எக்ஸாம் பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.






