விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, உங்கள் இருவருக்கும் மத்தியில் நான் எதற்கு என்று கிளம்பி விட்டார். குமார்-அரசி இருவரும் தியேட்டருக்குள் சென்றார்கள். பின் பழனியின் அண்ணன் வீட்டிற்கு சென்ற சுகன்யா, இவரை கல்யாணம் செய்து கொண்டு நான் ரொம்பவே கஷ்டப்படுகிறேன். கையில் காசு கூட இல்லை என்று ரொம்ப ஏளனமாக பழனியை பேசி இருந்தார். உடனே ராஜியின் அம்மா, சேர வேண்டிய நேரத்தில் எல்லோருக்கும் சொத்து பிரித்து கொடுப்பார்கள். நீ அதை பற்றி எல்லாம் யோசிக்காதே என்று கோவமாக பேசி இருந்தார்.
கடைக்கு வந்த பாண்டியனின் அக்கா கணவர், என் மகனுக்கு அரசியை கல்யாணம் செய்து வைப்பது விஷயமாக பேச வந்திருக்கிறேன். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார். உடனே பாண்டியன், எனக்கு கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அரசி படிக்க ஆசைப்படுகிறாள். அவள் நிறைய படிக்கணும். அவள் படித்து பெரிய வேலைக்கு போகணும் என்பது தான் என்னோட கனவோடு பேசி இருந்தார். இன்னொரு பக்கம் அரசி, குமாருடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரில் வெளியே நின்று போட்டு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், அரசி- குமார் சேர்ந்திருப்பதை பார்த்து கோபத்தில் பொங்கி எழுந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் சரவணன், குமாரின் சட்டையை பிடித்து சண்டை போட்டார். அரசி, என்ன சொல்வது என்று புரியாமல் கதறி அழுதார். குமார், நானும் அரசியும் காதலிக்கிறோம் என்றவுடன் கோபம் தாங்க முடியாமல் சரவணன் குமாரை அடித்தார். தியேட்டர் முன்பு கலவரமே வெடிக்கிறது. அதற்கு பின் சரவணன், அரசியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது வரும் வழியில் செந்திலுக்கு போன் செய்து அப்பாவை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வா என்று சரவணன் சொன்னார். பின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சரவணன், என்ன வேலை செய்திருக்கிறாய்? இதுதான் நீ படிக்க போகும் லட்சணமா? என்று ஆவேசப்பட்டு கத்தி இருந்தார்
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சரவணன் எல்லோருக்கும் போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். பின் வீட்டில் எல்லோருமே என்ன பிரச்சனை? எதற்காக வரவைத்தான்? என்று புரியாமல் குழம்பி போயிருந்தார்கள். அப்போது சரவணன், அரசியை அழைத்து வந்தவுடன் எல்லோருமே, என்ன ஆனது? என்ன பிரச்சனை? என்று கேட்டார்கள். உடனே சரவணன், அரசி ஒருவரை காதலிக்கிறார். தியேட்டரில் அவர் காதலருடன் கைகோர்த்து சிரித்து பேசி வருகிறான் என்றவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
கோபத்தில் கோமதி, சரவணன் அடித்தார். சரவணன், நான் சொல்வது தான் உண்மை. அவள் காதலிப்பது வேறு யாரும் இல்லை குமரவேல் என்று சொன்னவுடன் எல்லோக்கும் மீண்டும் பேரதிர்ச்சி ஆகி இருந்தது. பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. செந்தில், கதிர், பழனி எல்லோருமே அரசியை பயங்கரமாக திட்டி இருந்தார்கள். பின் அரசி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டார். என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் பாண்டியன் மயங்கி விழுதார் மொத்த குடும்பமே பதறி போனது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன், அதிர்ச்சியில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அரசி தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். கோபத்தின் உச்சிற்க்கு சென்ற கோமதி, அரசியை பயங்கரமாக வெளுத்து வாங்கினார். மருமகள் எல்லோருமே கோமதியை தடுத்தும் அவரால் ஆத்திரம் தாங்க முடியாமல் அரசியை அடிக்கிறார். அதற்குப் பின் அரசின் மொபைலை எடுத்து செக் பண்ணுகிறார்கள். அப்போது குமார் கொடுத்த பரிசு பொருட்களை வீட்டில் கோமதி ஆராய்கிறார். கிரீட்டிங் கார்டு, மோதிரம், செயின் எல்லாத்தையும் பார்த்துவிட்டு இன்னும் கோமதி கோபப்படுகிறார். உடனே அவர், கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டு அரசியை அடிக்கிறார். அரசி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.