விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி தன் தரப்பு நியாயத்தை சொல்ல வந்தார். ஆனால், யாருமே கேட்கவில்லை. பாண்டியன், கோமதி, சரவணன் என்று வீட்டில் உள்ள எல்லோருமே மாற்றி மாற்றி பழனியை திட்டிக் கொண்டிருந்தார்கள். கோபத்தின் உச்சத்தில் சென்ற கோமதி, நீ இனிமேல் என் முகத்தில் முழிக்காதே. வீட்டை விட்டு வெளியே போ என்றார். பாண்டியனுமே வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் பழனி ரொம்பவே மனமடைந்து விட்டார். கதிர், பழனிக்காக சப்போர்ட் செய்ய வந்தார். ஆனால், பாண்டியன் கேட்க வில்லை. பின் மனமுடைந்து அங்கிருந்து பழனி கடைக்கு வந்தார்.

பழனி, பாண்டியனும் கோமதியும் தன்னை புரிந்து கொள்ளாததை பற்றி சொல்லி அழுதார். இதுதான் சந்தர்ப்பம் என்று சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பற்றி மோசமாக பேசி இருந்தார். முத்துவேல், இனி உன் கடை வியாபாரத்தையும் குடும்பத்தையும் பார் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று நினைத்து ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். மீனா-ராஜி இருவருமே அப்படியெல்லாம் இருக்காது என்று பழனிக்கு சப்போர்ட்டாக பேச பார்த்தார்கள். ஆனால், கோமதி கேட்கவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன், பழனி கடை ஆரம்பித்ததையும் வீட்டில் பாண்டியன் கோபப்பட்டு சண்டை போட்டதுமே சொன்னார். இதனால் கோபப்பட்ட செந்தில், பழனியின் கடைக்கு வந்தார். அப்போது சரவணன்- பழனி இருவருமே கடை ஆரம்பித்ததை பற்றி பழனியிடம் கேட்டார்கள். கோபத்தில் செந்தில் ரொம்ப மோசமாக பழனியை பேசி விட்டார். இதனால் கொந்தளித்த பழனி, ஆமாம் திட்டம் போட்டு தான் செய்தேன். என்னை ஒதுக்கிய குடும்பம் எனக்கும் வேண்டாம் என்றெல்லாம் பதிலுக்கு பதில் பேசி விட்டார். இதனால் ஆத்திரமடைந்து சரவணன்- செந்தில் இருவருமே அங்கிருந்து சென்றார்கள். இதையெல்லாம் பார்த்து சக்திவேல் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காந்திமதி, இது எங்களுக்கே தெரியாத நடந்த விஷயம் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், கோமதி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார். வடிவு, மாரி இருவருமே பழனியை திட்டியதற்காக கோமதி குடும்பத்தை திட்டினார்கள். உடனே கொந்தளித்த மீனா, நீங்கள் பண்ணது நியாயமா? நீங்கள் செய்து தான் துரோகம். நீங்கள் மூத்த மருமகளாக இப்படி கேவலமாக செய்வீர்களா? என்றெல்லாம் வெளுத்து வாங்கினார். இதைக் கேட்டு முத்துவேல் குடும்பம் ஆடி போகிறது.
https://www.youtube.com/watch?v=8Imksj9bq_Q
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கதிர், பழனியை பார்ப்பதற்காக கடைக்கு சென்றிருக்கிறார். அங்கு வந்த குமார், கதிரிடம் வம்பு இழுக்கிறார். பழனி வேண்டாம் என்று தடுத்துமே குமார், கதிரை அடித்து வெளியே தள்ளுகிறார். இதையெல்லாம் சுகன்யா வீடியோவாக எடுத்து ராஜிக்கு அனுப்பி விடுகிறார். கோபத்தில் ராஜி, குமாரின் சட்டையை பிடித்து சண்டைக்கு போகிறார். இரு குடும்பங்களுக்கும் இடையே பயங்கர சண்டை நடப்பதால் காந்திமதி ரொம்பவே மனம் உடைந்து அழுகிறார்.






