விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சுகன்யா, சக்திவேல் வீட்டில் நடந்ததை ராஜியிடம் சொன்னார். அதற்குப் பிறகு குமாரின் அம்மா மாரி கோயிலுக்கு வர சொன்னதால் ராஜியிமே கிளம்பி கோவிலுக்கு போனார். அங்கு மாரி, என் மகன் செய்தது தவறுதான். தயவுசெய்து அவனை மன்னித்துவிடு. உனக்காக தான் அவன் அப்படி செய்து விட்டான். என் மகனை விட்டு என்னால் இருக்க முடியாது. தயவு செய்து உன் மாமியார் வீட்டில் எடுத்து சொல்லி என் மகன் மீது போட்ட கேசை வாபஸ் வாங்க சொல்லு என்று கெஞ்சி அழுதார்.

மாரி, அரசி பட்ட கஷ்டங்களை நான் மறக்கவில்லை. குமாருமே தான் செய்த தவறை உணர்ந்துவிட்டான். தயவுசெய்து உங்கள் வீட்டில் சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொல்லு என்று ரொம்பவே கெஞ்சி கதறி அழுதார். அதற்கு ராஜி, நான் குமாரை மட்டும் யோசிக்க முடியாது. என் மாமனார், அரசி பற்றி எல்லாம் யோசிக்கணும். என்னால் எதுவும் பண்ண முடியாது என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு மாரி, ராஜியை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே செந்தில் வரவில்லை என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில் வீட்டில் உள்ள எல்லோருக்குமே முதல் மாத சம்பளம் வந்ததால் கிப்ட் வாங்கிக்கொண்டு வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் ஒவ்வொருவருக்கும் தான் வாங்கிய பொருளை எல்லாம் கொடுக்க, பாண்டியன் கோபப்படு முறைத்துக் கொண்டே இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக செந்தில் வாங்கி கொடுத்த கிப்ட்டை ஏற்றுக்கொண்டார்கள். பாண்டியனுக்கு வாட்ச் கொடுத்தார். பாண்டியன், இதெல்லாம் இப்போ தேவையா? பத்து லட்சம் லோன் வாங்கி வைத்துவிட்டு இந்த ஆடம்பர செலவு பண்ணனுமா? என்று திட்டிவிட்டு கிப்டையும் வாங்காமல் சென்றார். இதனால் செந்தில் பாண்டியன் மீது கோபப்பட்டார். பின் செந்தில், தன் மனைவியிடம் சொல்லி புலம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தன்னுடைய சித்தி,குமாரை பற்றி சொன்னதை கதிரிடம் சொன்னார். அதோட ராஜி, குமாருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட கதிர், ராஜியை திட்டினார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. உடனே ராஜி, கேசை வாபஸ் வாங்க சொல்லவில்லை என்றார். சக்திவேல் வீட்டில் குமாருக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை முத்துவேல் சொன்னார். அப்பத்தா, அரசி வாழ்க்கையும் வீணாகப் போய்விடும். அவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். ஆனால், முத்துவேல் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, செந்தில் இருவருமே வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டில் பாண்டியன் நடந்து கொண்டதைப் பற்றி செந்தில் பேசுகிறார். இன்னொரு பக்கம் குமாரை பார்ப்பதற்காக பெண் வீட்டில் வந்திருக்கிறார்கள். சக்திவேல் குமாரை பற்றி பெருமையாக பேசினார். குமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. எனக்கு தெரியாமல் இவர்கள் அழைத்து விட்டார்கள். தயவு செய்து கிளம்புங்கள் என்று சொல்கிறார். இதைக்கேட்டு சக்திவேல், முத்துவேல் இருவருமே ஷாக் ஆகிறார்கள். இதையெல்லாம் பார்த்த சுகன்யா, அரசி இடம் தேவையில்லாத விஷயத்தை சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் வந்த மீனா, ராஜி இருவருமே சுகன்யாவை திட்டிவிட்டு அங்கிருந்து அரசியை அழைத்து சென்று விடுகிறார்கள். அப்போது பழனி, சுகன்யாவை திட்டி வார்னிங் கொடுக்கிறார். அதற்குப்பின் ராஜி- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, கதிர் டிராவல்ஸ் வைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணம் தேவை. சென்னையில் ஒரு நடன போட்டி நடக்கிறது. அதில் கலந்துகொண்டு கதிருக்கு அந்த பணத்தை வெற்றி பெற்று தர வேண்டும் என்று சொல்கிறார். உடனே மீனா, இதை வீட்டில் எப்படி சொல்லி பல அனுமதி வாங்குவாய் என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






