விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தார். பாக்கியம் கோபமாகவே இருந்தார். அப்போது தங்கமயில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு பிரச்சினை செய்ய கிளம்பினார். உடனே தடுத்து நிறுத்திய மீனா, முதலில் சரவணன் மாமாவிடம் அக்கா சொல்லட்டும். அதற்கு பிறகு வீட்டில் எல்லோரிடமும் சொல்லலாம் என்றார். இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, செந்திலை புது வீடு வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினார். செந்தில், மீனாவின் அப்பா சொன்னதால் அமைதியாக ஒத்துக் கொண்டார்.

வீட்டிற்கு வந்த முத்துவேல் இடம் காந்திமதி, பாண்டியன் வீட்டில் இருப்பதை பற்றி சொன்னார்கள். பின் சக்திவேல் செய்த வேலையை எல்லாம் வீட்டில் உள்ள எல்லோருமே சொன்றார்கள். கோபப்பட்ட முத்து, சக்திவேலை திட்டினார். பின் தன் அம்மாவை அழைப்பதற்காக முத்துவேல் பாண்டியன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். பாண்டியன் வீட்டில் எல்லோருமே வெளியே வந்து விடுகிறார்கள். முத்துவேல், நம் வீட்டுக்கு போகலாம் என்றார். காந்திமதி, அந்த வீட்டிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையா? உன் தம்பி தான் சொன்னான். நான் இங்கேயே இருக்கிறேன்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
எங்கிருந்தாலும் நீங்கள் எல்லோருமே நன்றாக இருக்கணும் என்று நான் வேண்டிக் கொள்வேன். என்னை கட்டாயப்படுத்தாதே என்று சொல்லி விட்டார். இதனால் முத்துவேல் அமைதியாக சென்று விட்டார்.
இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை கோயிலுக்கு வர வைத்து பேசி இருந்தார். அப்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தங்கமயில் சொன்னார். இதைக் கேட்டவுடன் சரவணன் ரொம்ப சந்தோஷப்பட்டு தங்கமயிலை தூக்கி சுத்தினார். கடைசியில் அது தங்கமயில் கண்ட கனவு. கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்தவுடன் சரவணன் ஏற்றுக் கொள்வார் என்று ரொம்ப சந்தோஷத்தில் தங்கமயில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா- செந்தில் இருவரும் வேலைக்கு தயாராகி கிளம்புகிறார்கள். இருவருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து மயில் போன் செய்கிறார். மீனா வேறொரு பெயரில் தான் நம்பரை சேவ் பண்ணி வைத்திருந்ததார். செந்திலுக்கு அது தெரியவில்லை. பின் மீனா, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன்- கோமதி இருவரும் பேசிக்கொள்ளாததை காந்திமதி கவனித்து விசாரிக்கிறார். ஏதேதோ சொல்லி கோமதியும் சமாளிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சரவணன் கோயிலுக்கு வந்து விடுகிறார். தங்கமயில் ரொம்ப சந்தோசமாக தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். சரவணன் நம்பாமல் தங்கமயிலை திட்டிக் கொண்டிருக்கிறார். பின் ஒரு கட்டத்தில் தங்கமயில் தன்னுடைய ரிப்போர்ட்டை எல்லாம் காண்பிக்கிறார். உடனே சரவணன், இந்த குழந்தைக்கு அப்பா யார்? நீ கர்ப்பமாக இருந்தாலுமே இது என் குழந்தை இல்லை என்று ரொம்ப மோசமாக பேசி விடுகிறார். சரவணன் சொன்ன வார்த்தையை கேட்டு தங்கமயில் உடைந்து போய் நிற்கிறார்.






