விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வீட்டில் பிரச்சனை செய்ய நினைக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், ஹோட்டலில் வாங்கிட்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டார். தன் மகனுக்குமே கொடுத்தார். இதை பார்த்து கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பாண்டியன் அதை கண்டுகொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டார். இன்னொரு பக்கம் அரசி, குமார் கொடுத்த மாத்திரை சாக்லேட் இரண்டையும் காந்திமதி இடம் கொடுத்தார். காந்திமதி, குமார் உன்னை தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். உனக்காக தான் அவன் திருமணம் பண்ண மறுக்கிறான் என்றார். அரசி எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

கதிர்-ராஜி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி ராஜி சொன்னார். கதிர், தன் தந்தையை விட்டுத் தராமல் பேசிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் இருவருமே கிரவுண்டில் பிராக்டிக்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். ராஜி கடுமையாக தன்னுடைய லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் பாக்கியம், மாணிக்கம் இருவருமே பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். பாக்கியத்தை பார்த்தவுடன் கோமதி பயங்கரமாக கொந்தளித்துக் கத்தினார். பின் இருவரும் சரவணன் பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோபத்தில் கோமதியும் திட்டினார். அப்போது பாக்கியம், சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காண்பித்து இதற்காகத்தான் உங்கள் பையன் என் மகளை விவாகரத்து செய்கிறானோ. உங்கள் பையனை ஒழுங்காக வளர்க்கவில்லை. எங்களை குறை சொல்கிறீர்கள் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார்.பாண்டியன் பயங்கரமாக டென்ஷன் ஆனார். அப்போது வந்த சரவணன், பாக்கியம்- மாணிக்கத்திடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு சென்ற விஷயத்தை அறிந்து தங்கமயில் வேகமாக வந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாணிக்கம், சரவணனை ரொம்ப மோசமாக பேசியதால் கோபத்தில் சரவணன் மாணிக்கத்தை அடித்து விடுகிறார். இதை பார்த்து தங்கமயில், தன்னுடைய அப்பா அம்மாவை தடுத்து எதற்காக இங்கே வந்தீர்கள்? என்று கேள்வி கேட்கிறார். கோமதி, நல்லா நாடகம் போடுகிறாய். உனக்கு வெட்கமா இல்லையா? என்று தங்கமயில் ரொம்ப மோசமாக பேசுகிறார். இருந்தாலும் தங்கமயில் எதுவும் சொல்லாமல் தன்னுடைய அப்பா, அம்மாவை அங்கிருந்து அழைத்து செல்ல பார்க்கிறார். பாக்கியம், தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல வருகிறார். உடனே மயில், தன்னுடைய அம்மாவை தடுத்து அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த பாக்கியம், எதற்காக உண்மையை சொல்ல மறுக்கிறாய் என்று கேட்கிறார். மயில், முடிந்து போன விஷயத்தை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. என் குழந்தையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் இருப்பது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்கிறார். மாணிக்கம் அதெல்லாம் வேண்டாம் என்று தன் மகளை தடுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் வீட்டிலிருந்து வந்ததால் கோமதி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியை சமாதானம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தான் பிள்ளை செய்யும் இடத்தில் மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்குகிறார்.






