விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டில் ராஜி, காந்திமதி, கோமதி, அரசி, மீனா எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, மயில் தான் இந்த வீட்டின் முதல் வாரிசை பெற்றெடுப்பார் என்று சொன்னவுடன் கோமதி பயங்கரமாக கொந்தளித்தார். பின் மீனாவையும் திட்டினார். மீனா, நாளைக்கு தங்கமயிலை வரவைத்து உண்மையை சொல்லிவிடலாம் என்று மனதிற்குள் சொன்னார். இன்னொரு பக்கம் ஆபீஸில் செந்தில், மீனாவின் அப்பா சொன்னதால் லஞ்சம் வாங்கினார்.

செந்தில், பணத்தை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டார். இருந்தாலும் செந்திலுக்கு கை எல்லாம் ரொம்பவே நடுங்குகிறது. பின் அந்த புரோக்கர், இதே மாதிரி எந்த வேலையாக இருந்தாலும் நான் உங்களிடம் கொண்டு வருகிறேன். எனக்கும் பார்த்து செய்யுங்கள் என்று சொன்னார். செந்திலுக்கு ரொம்பவே பதட்டமாக இருக்கிறது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தைப் பற்றி மீனாவிடம் எதுவும் சொல்லாமல் பணத்தை மறைத்து வைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது வீட்டிற்கு மீனாவின் அப்பா ரவி, அம்மா எல்லோருமே வந்துவிட்டார்கள். ரவி, எதற்கு பயப்படுகிறீர்கள்? தைரியமாகிருங்கள். இதெல்லாம் ஒரு தப்பு கிடையாது. நடைமுறையில் நடக்கும் விஷயம் தான் என்றெல்லாம் சொல்லி செந்திலை சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் ராஜி தன்னுடைய போலீஸ் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். கதிரும் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயிலுக்கு போன் செய்து கோவிலுக்கு வர சொல்கிறார்.
பின் தங்கமயில் தயாராகி கிளம்பும்போது பாக்கியமும் ரெடியாகி வருகிறார். தங்கமயில், வேண்டாம் என்று சொல்லியுமே பாக்கியம் கேட்கவில்லை. அவருடன் கோயிலுக்கு வருகிறார். இன்னொரு பக்கம் மீனா, கோமதியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வருகிறார். பின் மீனா, பாக்கியம்- தங்க மயிலை தனியாக சந்தித்து பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
மயிலை உண்மையை கோமதியிடம் பேச சொல்கிறார். தங்கமயில் தன்னுடைய அம்மாவை வெளியே நிறுத்திவிட்டு மீனாவுடன் கோயிலுக்குள் செல்கிறார். தங்க மயிலை பார்த்தவுடன் கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது. தங்க மயிலிடம் கோமதி சண்டை போடுகிறார். மீனா எவ்வளவு எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், கோமதி கேட்கவில்லை. தங்கமயில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். அந்த சமயம் வந்த பாக்கியம், கோமதியின் குடும்பத்தை மோசமாக பேசுகிறார். இதனால் கோமதிக்கு பயங்கர கோபம் வருகிறது.






