விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, என் வீட்டு பிரச்சனையில் தலையிடாதே என்று திட்டி பழனியை அனுப்பி விட்டார். அதற்கு பின்பு பாண்டியன், செந்தில்- கதிரை பார்த்து ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினீர்கள்? நான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை ரெண்டு பேருமே எடுத்து வையுங்கள். இரண்டு மாதம் உங்களுக்கு டைம் கொடுக்கிறேன் என்றார். செந்தில், கதிரால் பேசவே முடியவில்லை. கோமதி எதற்காக பணத்தை மீண்டும் கேட்கிறீர்கள் என்றார். பாண்டியன் இது என்னுடைய விஷயம் யாரும் தலையிட வேண்டாம் என்று திட்டி விட்டு ஹோட்டலில் வாங்கி வந்த சாப்பாட்டை சாப்பிட்டார்.

பாண்டியன் கடையிலிருந்து சாப்பாட்டுகளை வாங்கி வந்து சாப்பிட்டார். அதோடு கோமதி வெறுப்பேற்றுவதற்காக வீட்டில் உள்ள எல்லோருக்கும் சாப்பிட கொடுத்தார். இதை பார்த்து கோமதிக்கு கோபம் அதிகமானது. கதிர், தன்னுடைய அம்மாவை சமாதனம் செய்தார். சரவணன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அஞ்சலி போன் செய்து சரவணனை கோவிலுக்கு வர சொன்னார். சரவணன்-அஞ்சலி இருவரும் கோவிலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது சரவணன் நண்பர் கோயிலுக்கு வந்தார். நண்பர், நீங்கள் இன்னும் காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு பழைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதை தங்கமயில் அப்பா பார்த்து ஷாக் ஆகி போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார். மறுபக்கம் குமார் ,தன்னுடைய பாட்டியின் மாத்திரைகளை எல்லாம் அரசி கொடுத்தார். அதோடு சாக்லேட்டையும் கொடுக்கிறார். கோபத்தில் அரசி திட்டுகிறார். இருந்தாலும் குமார் கொடுத்த சாக்லேட்டை தூக்கி போட முடியாமல் அரசி அமைதியாக வைத்துக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, மயில் உடைய உடல்நலத்தை பற்றி அக்கரையாக விசாரித்துக் கொண்டிருக்கிறார். மயில் மீனா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ராஜி பயங்கர கடுப்பாகிறார். பின் மீனாவை தனியாக சந்தித்து ராஜி கடுமையாக பேசுகிறார். மீனா, உண்மை தெரியாமல்
எதுவும் பேசாதே என்று ராஜியை மயில் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்கிறார். பின் மயில், மீனா, ராஜி மூவருமே பேசிக் கொள்கிறார்கள். அப்போது மீனா, மயிலின் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்தும், சரவணன் நடந்து கொண்டது விதத்தை அறிந்து ராஜி வருத்தப்படுகிறார். பின் மீனா மீது தவறில்லை என்பதை ராஜி புரிந்து கொள்கிறார். அதற்குப்பின் ராஜி, கதிரிடம் எல்லா உண்மையும் சொல்ல நினைக்கிறார். ஆனால், மீனா வேணாம் என்று சொல்லியிருக்கிறார். அதற்குபின் பாண்டியன், 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட விஷயத்தை அறிந்த முத்துவேல், பணம் கொடுப்பதாக சொல்லி கதிர், ராஜிடம் பேசுகிறார். கதிர், வேண்டாம் என்று சொல்லி வருகிறார்.






