விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் சாப்பிட போகும் போது பாக்கியம் திட்டினார். இதனால் தங்கமயில் சாப்பிடாமலே வேலைக்கு சென்று விட்டார். பின் தங்கமயில் வேலை செய்யும் இடத்தில் சமைப்பதற்கு ஆள் வரவில்லை என்று மீனாவின் தோழி புலம்பி கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், நானே சமைக்கிறேன் என்றார். இதனால் மீனாவின் தோழி, நான் மொத்தமாக உனக்கு 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன். எல்லா வேலையும் உன்னால் செய்ய முடியுமா? என்றார். தங்கமயில், சரி என்று சொல்கிறார். பின் இந்த விஷயத்தை மீனாவிடம் சொல்லி தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

அதற்குப்பின் மீனா- கோமதி இருவரும் பாண்டியனை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து ராஜி-கதிர் கிளம்புகிறார்கள். இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து காந்திமதி சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் காந்திமதி, கோயிலுக்கு போனார். அங்கு பெண் வீட்டாரை காந்திமதி வர வைத்தார். அப்போது காந்திமதி, குமார்- அரசி விஷயத்தை பற்றி சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் குமார் இன்னும் அரசியை காதலிப்பதாகவும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கப் போவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு பெண் வீட்டார் ஷாக் ஆனார்கள். பின் காந்திமதி, இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டார். அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த பாண்டியன், தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் கோமதி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பின் பாண்டியன் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பாடு எல்லாம் போட்டு சாப்பிடுகிறார். அதை பார்த்து கோமதி அமைதியாகவே இருக்கிறார். பாண்டியன் பயங்கரமாக கோமதி மீது கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் கோவிலில் மீனா- தங்கமயில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். தங்கமயில், வேலை செய்வதை பற்றி ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து செந்தில் போன் செய்கிறார். மீனா, ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். பின் அஞ்சலி, சரவணனுக்கு ஃபோன் செய்து கோயிலுக்கு வர சொல்கிறார். பின் அஞ்சலி-சரவணன் இருவரும் மீனா- தங்கமயில் இருக்கும் கோவிலுக்கு வந்து விடுகிறார்கள். அஞ்சலி-சரவணன் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மீனா ஷாக் ஆகிறார். தங்கமயில், அவர்களை பார்க்கக்கூடாது என்பதற்காக ஏதேதோ காரணம் சொல்லி கோவிலை விட்டு மீனா அழைத்து செல்கிறார்.
https://www.youtube.com/watch?v=sb42CNKjamE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் மீனா, தங்கமயில் இருவரும் கோவிலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே கோயிலுக்கு சரவணன், அஞ்சலி வருகிறார்கள். அதை பார்த்து மீனா ஷாக் ஆகிறார். பின் ஒரு வழியாக தங்கமயிலை விட்டு அழைத்து சென்று விடுகிறார். மீனா, நேத்து நீங்கள் கோயிலுக்கு வந்திருந்தீர்கள். அப்போ உங்களுடன் பேசிக் கொண்டிருந்த பெண் யார்? அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்கிறார். சரவணன் ஷாக்காகி இருக்கிறார்.






