விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மயில், முடிந்து போன விஷயத்தை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. என் குழந்தையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் இருப்பது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு போகிறேன் என்றார். மாணிக்கம் அதெல்லாம் வேண்டாம் என்று தன் மகளை தடுத்து விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில் வீட்டிலிருந்து வந்ததால் கோமதி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியை சமாதானம் செய்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தான் பிள்ளை செய்யும் இடத்தில் மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கினார்.

ராஜி, மதியம் சாப்பாடுஎடுத்துக் கொண்டு வராததால் கதிர் அவரை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு போட்டார். ராஜி, கதிர் இருவருவே தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள். இன்னொரு பக்கம் காந்திமதி, குமார்- அரசியை சந்தித்து பேச வைப்பதற்காக வேண்டுமென்றே சோப் இல்லை, பிரஸ் இல்லை என்று சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார். இதை கவனித்த அரசி, உங்கள் திட்டம் எனக்கு புரிந்து விட்டது. எங்களை சேர்க்க பார்க்கிறீர்களா? என்று திட்டி விட்டு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் கடையில் சரவணன் வேலை செய்து கொண்டிருந்தார். அஞ்சலி கோவிலுக்கு வர சொன்னதால் சரவணன் ஏதேதோ காரணங்களை சொல்லி சென்று விட்டார். பாண்டியனுக்கு சந்தேகம் வருகிறது. பின் பழனியை கடையில் விட்டு பாண்டியன், சரவணன் என்ற கோவிலுக்கு போனார். அங்கு சரவணன்- அஞ்சலி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து பாண்டியனுக்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் பாண்டியன், உன் மாமனார் சொன்னபடி கோயிலில் நீ சந்தித்து பேசும் பெண் யார்? அவருக்கும் உனக்கும் என்ன சம்மந்தம் என்றெல்லாம் கேட்டார். சரவணன் ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன், என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்து வந்தாலும் தங்கமயில் உடன் இருந்த நினைவுகள் என்னை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. நான் ரொம்பவே மனவேதனையில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய கல்லூரி தோழி அஞ்சலியை சந்தித்தேன். அவளிடம் பேசும் போது எனக்கு கவலை மறந்தேன். மற்றபடி எனக்கும் அஞ்சலி மனதிலும் எந்த தவறான எண்ணமும் இல்லை. நாங்கள் நட்பு ரீதியாக தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார். பாண்டியன், சரவணன் சொல்வதை நம்புகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த செந்தில் பணக்கட்டுகளை பீரோவில் வைக்கப் போகிறார். அப்போது மீனா வந்ததால் கைத்தறி மொத்த பணத்தையும் செந்தில் கீழே கொட்டி விடுகிறார். பயத்தில் செந்தில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார். மொத்த பணத்தையும் எடுத்த மீனா, யார் கொடுத்தது? எங்கு எப்படி இந்த பணம் வந்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். செந்தில், பதில் சொல்லவே முடியவில்லை. மீனாவும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் செந்தில் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மீனா விடமிருந்து தப்பித்து விடுகிறார். அதற்குப்பின் வீட்டில் பாண்டியன் கஷ்டப்பட்டு துணி துவைத்து கொண்டிருக்கிறார். கோமதி வேண்டாம் என்று சொல்லியும் பாண்டியன் கேட்கவில்லை.






