விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், இந்த விவாகரத்து விஷயத்தில் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லாதீர்கள். இதுதான் என்னுடைய முடிவு. நான் மாற மாட்டேன் என்றார். அதற்குப்பின் மாணிக்கம்- பாக்கியா இருவருமே போலீஸ் ஸ்டேஷன் சென்று பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்தார்கள். அப்போது பாக்யா, என் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் பண்ண கொடுமையால் என்னுடைய மகள் கரு கலைந்து விட்டது என்றெல்லாம் பொய்யான புகார்களை எல்லாம் சொன்னார்.

பாக்கியா கொடுத்த புகாரால் மீனாவை தவிர பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே கைது செய்து விட்டார்கள். இதனால் அப்பத்தா, மாரி, வடிவு எல்லோருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த முத்துவேல், சக்திவேலிடம் நடந்ததை எல்லாம் அப்பத்தா சொன்னார். சக்திவேல்-முத்துவேல் இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று விட்டார்கள். இன்னொரு பக்கம் போலீஸ், தங்கமயில் கையெழுத்து இருந்தால் தான் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அவரை வர சொல்லுங்கள் என்றார். பாக்கியா, தங்கமயில் வந்தால் உண்மையெல்லாம் வெளிவந்து விடும் என்று பயந்து கொண்டு அவள் ரொம்பவே மனமடைந்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நான் வீட்டுக்கு போய் கையெழுத்து வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி அங்கிருந்து சென்று விட்டார். செந்தில், மீனாவிற்கு போன் செய்து உன்னை போலீஸ் கைது செய்யவில்லையா? நாங்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று நடந்த உண்மை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு மீனா அதிர்ச்சி ஆனார். அதற்குப்பின் முத்துவேல் - சக்திவேல் இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். ராஜி, தன் அப்பாவை பார்த்துவிட்டு கட்டிப்பிடித்து அழுதார். முத்துவேலும் தன் மகளுக்கு ஆறுதல் சொன்னார். கோமதியும் ரொம்ப எமோஷனலாக தன் அண்ணன்களை பார்த்து அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவேல்- சக்திவேல் இருவருமே ராஜி, கோமதிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நடந்ததை விசாரிக்கிறார்கள். போலீஸ், அவர்களுடைய மருமகள் குடும்பத்தினர் புகார் கொடுத்திருப்பதால் தான் விசாரணைக்கு அழைத்து வந்திருக்கிறோம். எதுவாக இருந்தாலும் அதற்குப் பிறகு பேசுங்கள். வரதட்சணை புகார் என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் முத்துவேல, சக்திவேல் இருவரும் வெளியே வந்து விடுகிறார்கள். இன்னொரு பக்கம் பாக்கியா, பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார். இதைக் கேட்டு தங்கமயில் ஷாக் ஆகி கதறி அழுகிறார்.

சீரியல் ட்ராக்:
தங்கமயில் உண்மையை சொல்ல நினைக்கிறார். பாக்கியா, இது தான் நீ சொல்லும் கடைசி பொய். போலீஸ் வந்து கேட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று சொல். உன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றலாம். இல்லை என்றால் இதே வீட்டில் தான் இருக்கணும் என்று தங்கமயிலின் மனதை சலவை செய்து விட்டு செல்கிறார். தங்கமயில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார். கடைசியில் உண்மையறிந்த பழனி, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வருகிறார். கோமதி, தன் தம்பியை பார்த்ததுமே கதறி அழுகிறார். சீரியல் முடிகிறது.






