விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தையும் ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். ராஜி, பழனி, கதிர் எல்லோரும் சொல்லியுமே சக்திவேல் கேட்கவில்லை. காந்திமதியை வீட்டுக்குள் விட முடியாது என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அப்போது கோமதி, தன்னுடைய அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. பின் காந்திமதி தன் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருந்தார். அப்போது கோமதி, எதற்காக திருமணத்தை நிறுத்தினீர்கள்? என்றார். காந்திமதியும் ஏதேதோ காரணத்தை சொல்லி விட்டார்.

தங்கமயில், வேலை செய்யும் இடத்தில் வாந்தி எடுத்துக்கொண்டு முடியாமல் இருந்தார். இதை பற்றி மீனாவிற்கு அவருடைய தோழி சொன்னார். பின் வீட்டிற்கு வந்த மீனா, தங்கமயிலை ஹாஸ்பிடல் அழைத்து சென்றார். அங்கு தங்கமயிலை செக் பண்ணிய டாக்டர், நீங்கள் ரெண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றார். தங்க மயில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மீனாவும், தங்கமயில் கர்ப்பமானதால் சந்தோஷப்பட்டார். பின் தங்கமயிலை அழைத்துக் கொண்டு பாக்கியம் வீட்டிற்கு மீனா போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அங்கு மீனா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தார். பாக்கியம் கோபமாகவே இருந்தார். அப்போது தங்கமயில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு பிரச்சினை செய்ய கிளம்பினார். உடனே தடுத்து நிறுத்திய மீனா, முதலில் சரவணன் மாமாவிடம் அக்கா சொல்லட்டும். அதற்கு பிறகு வீட்டில் எல்லோரிடமும் சொல்லலாம் என்றார். இன்னொரு பக்கம் மீனாவின் அப்பா, செந்திலை புது வீடு வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினார். செந்தில், மீனாவின் அப்பா சொன்னதால் அமைதியாக ஒத்துக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த முத்துவேல் இடம் காந்திமதி, பாண்டியன் வீட்டில் இருப்பதை பற்றி சொல்கிறார்கள். பின் சக்திவேல் செய்த வேலையை எல்லாம் வீட்டில் உள்ள எல்லோருமே சொல்கிறார்கள். கோபப்பட்ட முத்து, சக்திவேலை திட்டுகிறார். பின் தன் அம்மாவை அழைப்பதற்காக முத்துவேல் பாண்டியன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். பாண்டியன் வீட்டில் எல்லோருமே வெளியே வந்து விடுகிறார்கள். முத்துவேல், நம் வீட்டுக்கு போகலாம் என்று சொல்கிறார். காந்திமதி, அந்த வீட்டிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையா? உன் தம்பி தான் சொன்னான். நான் இங்கேயே இருக்கிறேன்.

சீரியல் ட்ராக்:
எங்கிருந்தாலும் நீங்கள் எல்லோருமே நன்றாக இருக்கணும் என்று நான் வேண்டிக் கொள்வேன். என்னை கட்டாயப்படுத்தாதே என்று சொல்லி விடுகிறார். இதனால் முத்துவேல் அமைதியாக சென்று விடுகிறார்.
இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை கோயிலுக்கு வர வைத்து பேசுகிறார். அப்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தங்கமயில் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் சரவணன் ரொம்ப சந்தோஷப்பட்டு தங்கமயிலை தூக்கி சுத்துகிறார். கடைசியில் அது தங்கமயில் கண்ட கனவு. கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்தவுடன் சரவணன் ஏற்றுக் கொள்வார் என்று ரொம்ப சந்தோஷத்தில் தங்கமயில் இருக்கிறார்.






