விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் போன் செய்ய, கோமதி போன் நம்பரை பிளாக் லிஸ்ட் போட்டு விட்டார். தங்கமயில் விடாமல் எல்லோருக்குமே போன் செய்து கொண்டே இருந்தார். கோமதி எல்லோரையும் பிளாக் லிஸ்டில் போட சொன்னார். அதற்குப்பின் ராஜி, தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை பற்றி கோமதியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பழனி, அண்ணன்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள் என்றார். ராஜி, நான் வீட்டிற்கு போகட்டுமா? என்றார். பழனி, நீ போயிட்டு வா, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனார்.

ராஜி, முத்துவேல் வீட்டிற்குள் சென்றார். ராஜியை பார்த்தவுடன் அப்பத்தா, மாரி, வடிவு எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து முத்துவேல்- சக்திவேல் இருவரும் வந்து விட்டார்கள். ராஜி, உங்களை பார்க்கணும் போல் இருந்தது. அதனால் தான் வந்தேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போய் விடுகிறேன் என்றார். முத்துவேல், நல்ல இருக்கியா? என்று விசாரித்தார். இதை கேட்டு ராஜி ரொம்ப சந்தோசப்பட்டார். முத்துவேல், ராஜி இங்க இருக்கணுமா? இல்லையா? என்று எதுவாக இருந்தாலும் நீங்க முடிவெடுத்துக் கொள் என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை எல்லாம் பார்த்து சக்திவேலுக்கு ரொம்ப கடுப்பானது. பின் குமாரிடம் சக்திவேல், ராஜு வீட்டிற்கு வந்ததை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக அவர்கள் செய்த துரோகத்தை மறக்க முடியாது. எப்போதுமே ராஜி மீது கோபமாக இருக்கும் படி என் அண்ணனை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதாவது செய்யணும் என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டில் நடந்தது எல்லாம் கோமதி, மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். தன் அண்ணன்களை வீட்டிற்கு வரவைக்க கோமதி, ராஜி நினைத்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், பாண்டியன் கடைக்கு வந்து மன்னிப்பு கேட்கிறார். கோபத்தில் சரவணன், தங்க மயிலை திட்டி வெளியே போக சொல்கிறார். ஆனால், தங்கமயில் கேட்கவே இல்லை. அங்கேயே கடைக்கு முன்பே நின்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது வந்த பாண்டியன், எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம். நீ கிளம்புமா என்று சொல்லி ஆட்டோவை வரவைத்து தங்கமயிலை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் ராஜி, கோமதியை கட்டாயப்படுத்தி தன்னுடைய அம்மா வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். வடிவு, மாரி இருவரும் கோமதியை சந்தோஷமாக வரவேற்கிறார்கள். ஆனால், முத்துவேல்- சக்திவேல் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். பின் கோமதி, வீட்டிற்கு சாப்பிட வர சொல்லி தன்னுடைய அண்ணன்களை அழைக்கிறார். கோபத்தில் சக்திவேல், கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்தோம். அவ்வளவுதான் மத்தபடி எந்த சொந்தமும் கொண்டாட தேவையில்லை. ஒழுங்கு மரியாதையோ வீட்டை விட்டு வெளியே போ என்று அவமானப்படுத்துகிறார். முத்துவேல், சக்திவேல் சொன்னது தான் சரி என்று கோமதியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அவமானத்தில் கோமதி அழுது கொண்டே மன்னிப்பு கேட்டு நிற்கிறார்.






