விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, இது எங்களுக்கே தெரியாத நடந்த விஷயம் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், கோமதி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார். வடிவு, மாரி இருவருமே பழனியை திட்டியதற்காக கோமதி குடும்பத்தை திட்டினார்கள். உடனே கொந்தளித்த மீனா, நீங்கள் பண்ணது நியாயமா? நீங்கள் செய்து தான் துரோகம். நீங்கள் மூத்த மருமகளாக இப்படி கேவலமாக செய்வீர்களா? என்றெல்லாம் வெளுத்து வாங்கினார். இதைக் கேட்டு முத்துவேல் குடும்பம் ஆடி போகிறது.

பழனியின் கடைக்கு கதிர் சென்று விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த குமார், கதிரை மோசமாக பேசி திட்டி இருந்தார். பழனி எவ்வளவு தடுத்துமே குமார் கேட்கவில்லை. ஆனால் கதிர் எதுவும் பிரச்சினை வேண்டாம் என்று அமைதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் குமார், கதிரை அடித்து வெளியே தள்ளுகிறார். இதையெல்லாம் சுகன்யா வீடியோவாக எடுத்து ராஜிக்கு அனுப்பி விட்டார். பின் பழனி, குமார் தடுத்து கதிரை அங்கிருந்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் இதை அறிந்த ராஜி கோபத்தில் குமார் சட்டை பிடித்து சண்டை வாங்கினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் இரண்டு வீட்டிலும் என்ன நடந்தது? என்று விசாரித்தார்கள். ராஜி, கதிரை குமார் அடித்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் கோபத்தில் ராஜி, கோமதி இருவருமே சண்டைக்கு போனார்கள். மாரி, வடிவு பதில் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் அங்கு வந்த கதிர்,ராஜியை சமாதானம் செய்து உள்ளே சென்று விட்டார். அதற்குப் பின் மீனா, ராஜி தன்னிடம் ஒழுங்காக பேசாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கதிர்- ராஜி இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது மீனா, ராஜியிடம் மன்னிப்பு கேட்டார்.பதிலுக்கு ராஜியும் மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்ந்து விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பழனி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே திட்டியதை நினைத்து ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி கொண்டிருக்கிறார். முத்துவேல் வீட்டில் எல்லோருமே ஆறுதல் சொல்கிறார்கள். இருந்தாலும் பழனியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை திட்டி விட்டு பழனிக்கு ஆதரவாகவும் சப்போர்ட்டாகவும் பேசுகிறார். முத்துவேல், நீ நிறைய கிளைகளை தொடங்க வேண்டும் என்றெல்லாம் அட்வைஸ் செய்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், பழனி பெரிய துரோகம் செய்தது போல பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
சரவணன், நீயும் உன் குடும்பமும் ஏமாற்றியதை விடவா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று வழக்கம் போல
தங்கமயில் திட்டிக் கொண்டிருக்கிறார். சீக்கிரத்திலேயே நீ மாட்டப் போகிறாய் தயாராக இரு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ராஜி-கதிர் இருவரும் அவுட்டிங் சென்று இருக்கிறார்கள். ஒவ்வொரு கடைக்காக கதிரை அழைத்துக் கொண்டு ராஜி போகிறார். இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இருவரும் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






